[ Zoom Meeting ] ஜூம் கூட்டத்தில் நிர்வாணமாக தோன்றிய தென்னாப்பிரிக்க பாராளுமன்ற உறுப்பினரின் மனைவி !! -01

[ Zoom Meeting ] ஜூம் கூட்டத்தில் நிர்வாணமாக தோன்றிய தென்னாப்பிரிக்க பாராளுமன்ற உறுப்பினரின் மனைவி


கோவிட்-19 நோய் தொற்றினால் கடந்த ஒரு வருட காலமாக முக்கிய ஆலோசனைகள் கூட்டங்கள், கருத்தரங்குகள், மாணவர்களுக்கான வகுப்புகள் போன்றவை ஜூம் செயலிகள் மூலமாக நடைபெற்று வருகிறது

இதுபோன்று கடந்த செவ்வாய் கிழமை கொரோனா நோய்தொற்று குறித்து தென்னாப்பிரிக்கா பாராளுமன்றத்தின் ஆலோசனைக் கூட்டம் ஜூம் செயலி மூலம் நடைபெற்றது இந்த நிகழ்ச்சி நாடு முழுவதும் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் 23 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதில் தென் ஆப்பிரிக்க பாரம்பரிய மன்றத்தின் உறுப்பினர் ” ஜோலைலி எண்டேவு ” என்பவர் கொரோனா நோய் தொற்று பரவல் குறித்து விளக்கம் அளித்து கொண்டிருந்தார் அப்போது எதிர்பாராதவிதமாக அவரது மனைவி அவருக்கு பின்னால் நிர்வாணமாக தோன்றினார் .

இதனால் அதிர்ச்சி அடைந்த அக்குழுவின் தலைவர் உடனடியாக ஜோலைலி எண்டேவிடம் உங்களுக்குப் பின்னால் இருப்பவர் சரியாக ஆடை அணிய வில்லை என தெரிவித்தார். இதையடுத்து சுதாரித்துக்கொண்ட எண்டேவு அவரது மனைவியை அங்கிருந்து விலகி செல்லுமாறு கேட்டுக்கொண்டார்.

Zoom-Meeting

இதைத் தொடர்ந்து நடந்த கூட்டத்தில் கூட்டத்தின் தலைவர் எண்டேவிடம் முக்கியமான பாராளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்கிறீர்கள் என்று உங்கள் மனைவியிடம் தெரிவித்தீர்களா இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு ஆகிறது இது எங்களை மிகவும் தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கியது என தெரிவித்தார்.

இதையடுத்து அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொண்ட எண்டேவு இந்த தொழில்நுட்பம் எங்களுக்கு புதிது என் வீட்டில் அலுவலகத்திற்கு என்று தனியாக அறை இல்லை நான் கணினி திரையை பார்த்துக் கொண்டிருந்ததால் பின்னால் என் மனைவி வருவதை பார்க்க இயலவில்லை நான் கூட்டத்தில் பங்கேற்றதை அறியாமல் என் மனைவி குளியலறையை பயன்படுத்த வந்துவிட்டார் இது எனக்கு மிகவும் தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தியுள்ளது எதிர்பாராமல் நடந்த இந்த நிகழ்வுக்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.


Star Tamil News                                        Zoom Meeting

Leave a Reply

%d bloggers like this: