[ Yusuf Ali ] ஹெலிகாப்டர் விபத்து – உயிர் தப்பினார் லூலு குரூப் நிறுவனத் தலைவர் !! -01

[ Yusuf Ali ]

ஹெலிகாப்டர் விபத்து உயிர் தப்பினார் லூலு குரூப் நிறுவனத் தலைவர்


கொச்சின் அருகே இன்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய கேரளாவின் பிரபல தொழிலதிபர் யூசுப் அலி மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

கேரள மாநிலத்தில் அமைந்துள்ள பிரபல லூலு வணிக வளாகம் மற்றும் லூலு குரூப்ஸ் இன்டர்நேஷனல் நிறுவன தலைவர் யூசுப் அலி இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் கொச்சினுக்கு பயணமானார் கொச்சின் மீன்வள பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்க முற்பட்டபோது கடுமையான காற்று மற்றும் கனமழை காரணமாக ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள நெடுஞ்சாலையோரம் தரையில் மோதி நின்றது.

Yusuf-ali

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக தொழிலதிபர் யூசுப் மற்றும் அவரது குடும்பத்தினர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கபட்டு சிகிச்சைக்காக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Star Tamil News                               Yusuf Ali

Leave a Reply

%d bloggers like this: