[ X Category ] X பிரிவு பாதுகாப்பில் மேற்குவங்க பாஜக எம்எல்ஏக்கள் !! -03

[ X Category ]

X பிரிவு பாதுகாப்பில் மேற்குவங்க பாஜக எம்எல்ஏக்கள்


மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 200 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றி மெகா வெற்றி பெற்றது. அங்கு பாஜக 77 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது.

தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் மிகப்பெரிய அளவிலான வன்முறைகள் வெடித்தது. இந்த வன்முறை சம்பவங்களால் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சூறையாடப்பட்டன.

X-category

Also Read : தடுப்பூசியால் ஆண்மை குறைவு ஏற்படுமோ என அஞ்சும் கிராம மக்கள் !!

இந்த சம்பவங்களால் பாரதிய ஜனதா கட்சி எம்எல்ஏக்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அச்சம் தெரிவித்திருந்தனர். மேலும் வன்முறைகள் குறித்து மத்திய பாதுகாப்பு அமைப்புகள் மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்திருந்தன. அதை அடிப்படையாக கொண்டு 61 பாரதிய ஜனதா கட்சி எம்எல்ஏக்களுக்கு X பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜியை தோற்கடித்த சுவேந்து அதிகாரிக்கு ஏற்கனவே Z கேட்டகிரி பாதுகாப்பும் மேலும் சிலருக்கு Y கேட்டகிரி பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X பிரிவு பாதுகாப்பில் 3 முதல் 5 துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வீரர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

Also Read : தடுப்பூசியால் ஆண்மை குறைவு ஏற்படுமோ என அஞ்சும் கிராம மக்கள் !!


Star Tamil News  |  X Category

Leave a Reply

%d bloggers like this: