[ Cricket ] உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி இன்று தேர்வு !! -01

[ Cricket ]

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி இன்று தேர்வு


ஐசிசி நிர்வாகம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது. டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் 8 முன்னணி அணிகள் 2019ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை பங்கேற்ற டெஸ்ட் போட்டிகளின் வெற்றிகள் அடிப்படையில் டாப் 2 அணிகள் இறுதி போட்டியில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பைக்காக மோதும்.

Cricket

Also Read : முன்னாள் இந்திய பிரதமரின் மகன் கொரோனாவுக்கு பலி

இறுதி போட்டி லண்டன் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதாத்தில் ஜூன் 18ம் தேதி தொடங்கி ஜூன் 22ம் தேதி வரை நடைபெறும் என ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்திருந்தது. மேலும் ஜூன் 23ந் தேதியை ரிசர்வ் டேவாக அறிவித்துள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாட இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளன.

இதைதொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்கவுள்ள உள்ள இந்திய அணி இன்று தேர்வு செய்யப்பட உள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள சேட்டன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழு 4 தொடக்க வீரர்கள் 5 மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் 9 பந்துவீச்சாளர்கள் மற்றும் 3 விக்கெட் கீப்பர்களை கொண்ட அணியை தேர்வு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளதை கவனத்தில் கொண்டு இந்திய அணியை தேர்வு செய்யவுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.

Also Read : முன்னாள் இந்திய பிரதமரின் மகன் கொரோனாவுக்கு பலி

Star Tamil News  | Cricket

Leave a Reply

%d bloggers like this: