[ WHO ] இந்தியாவின் நிலையை கண்டு பரிதாபப்படும் உலக சுகாதார அமைப்பு !! 01

[ WHO ]

இந்தியாவின் நிலையை கண்டு பரிதாபப்படும் உலக சுகாதார அமைப்பு


இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தி வருகிறது. நோய் தொற்றால் தினசரி உயர்ந்து வரும் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை வேதனை அளிப்பதாக உள்ளது என உலக சுகாதார அமைப்பின் [ WHO ] தலைவர் டெட்ராஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா நோய் தொற்றின் 2வது அலை மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தி வருகிறது. தினசரி பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 3.5 லட்சத்திற்கும் மேல் தொடர்ந்து பதிவாகி வருகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்கின்றனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை ஒரு கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அடுத்த 6 மாதத்திற்குள்ளாகவே மீண்டும் ஒரு கோடி பேர் நோய் தொற்றால் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுவிட்டது.

தற்போது இந்தியாவில் நிலவும் இந்த இக்கட்டான சூழ்நிலையை பார்த்து உலக நாடுகள் ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், மருந்துகள், பிபிஇ கிட் உட்பட பல விதமான மருத்துவ உதவிகளை வழங்கி வருகின்றது.

WHO

Also Read : குடத்திற்குள் சிக்கி கொண்ட சிறுவனின் தலை கடும் போராட்டத்திற்கு பின் மீட்பு !!

 

இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் இந்தியாவில் கொரானா நோய் பரவல் மிகுந்த கவலையளிக்கும் விதமாக உள்ளது.

அந்நாட்டில் உள்ள பல மாநிலங்களில் அதிக அளவிலான மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருவது வேதனையளி்க்கிறது.

உலக நாடுகளுக்கு நாங்கள் சொல்வதெல்லாம் கொரோனா நோய் பரவலின் முதல் அலையைவிட 2வது அலை மிகவும் மூர்க்கத்தனமாக இருக்கும் என்பதுதான்.

இந்தியாவுக்கு உலக சுகாதார அமைப்பால் ( WHO ) முடிந்த அளவு உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறோம். மருந்துகள், ஆக்சிஜன் செறிவூக்கிகள், மொபைல் மருத்துவமனை அமைக்க டென்ட்கள், முகக்கவசம் போன்றவற்றை அனுப்பி வருகிறோம்.

மேலும் இந்தியாவுக்கு உதவி செய்துவரும் நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு நன்றி தெரிவித்துக் கொள்கிறது. அவசரநிலை போன்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டாலும் இந்தியாவில் இந்த நோய் தொற்று கட்டுப்படவில்லை என டெட்ராஸ் அதானம் தெரிவித்தார்.

Also Read : தடுப்பூசிகள் மூலம் 12 ஆயிரம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன – பிரிட்டன் !!


Star Tamil News  |  WHO

Leave a Reply

%d bloggers like this: