[ West Bengal ] மம்தாவின் நந்திகிராம் உட்பட 30 தொகுதிகளுக்கான 2ம் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்தது !!

[ West Bengal ]

மம்தாவின் நந்திகிராம் உட்பட 30 தொகுதிகளுக்கான 2ம் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்தது

 


மேற்கு வங்க சட்டசபைக்கான இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்றது 294 சட்டசபை தொகுதிகளை கொண்ட மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது இதில் முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த மார்ச் 27ஆம் தேதி நடைபெற்றது அந்தத் தேர்தலில் சுமார் 84.5% வாக்குகள் பதிவாகியிருந்தன.

West-bengal

இதைத்தொடர்ந்து இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் மார்ச் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் இன்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதி உட்பட 30 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. மாலை 6 மணியுடன் முடிவடைந்த இந்த வாக்குப்பதிவில் சுமார் 80.43 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்தியா தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


Star Tamil News           West Bengal Election

Leave a Reply

%d bloggers like this: