[ Weather Forecast ] அடுத்த 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் !!

[ Weather Forecast ]

அடுத்த 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்


கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது . கோடை வெயிலின் கோரதாண்டவத்தால் பகல் நேரங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிர்த்து வந்தனர்.

இந்நிலையில் இன்று முதல் அடுத்த நான்கு தினங்களுக்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Weather-forecast

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட அறிவிப்பில் தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகள், தென் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகள், வட தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் லேசான கனமழை பெய்யக்கூடும் எனவும் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அதிகபட்சமாக 5 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.


Star Tamil News                Weather Forecast 

Leave a Reply

%d bloggers like this: