[ Volcano Erupts ] ஐஸ்லாந்து நாட்டின் தலைநகர் அருகே எரிமலை வெடிப்பு !!-01

[ Volcano Erupts ] ஐஸ்லாந்து நாட்டின் தலைநகர் அருகே எரிமலை வெடிப்பு.


மக்கள் தொகை அடர்த்தி குறைவாக உள்ள தீவு நாடான ஐஸ்லாந்து எதிரெதிர் திசையில் மோதிக்கொள்ளும் புவித்தட்டு அமைப்புகள் கொண்டுள்ளதால் அந்நாட்டு மக்களுக்கு நிலநடுக்கம் என்பது அன்றாட வாழ்க்கையில் ஒரு நிகழ்வாகவே இடம்பெற்றுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் 18 ஆயிரம் முறை நிலஅதிர்வு உணரப்பட்டது இதையடுத்து ஐஸ்லாந்து நாட்டின் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் ஐஸ்லாந்து தலைநகர் ரெய்காவிக்கின் தென்மேற்கு திசையில் 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள Geldingardalur பள்ளத்தாக்கில் உள்ள fagradalsfjail என்கிற எரிமலை எந்த நேரமும் வெடித்து சிதறலாம் என அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

volcano-erupts

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் சாலை போக்குவரத்து தடைசெய்யப்பட்டு அப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து நேற்றைய தினம் எரிமலை வெடித்து சிதறியதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டது. மேலும் எரிமலை வெடிப்பின் தாக்கம் குறித்து அறிய ஹெலிகாப்டர் மூலம் எடுக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Star Tamil News                  volcano Erupts

Leave a Reply

%d bloggers like this: