[ Vivek ] நடிகர் விவேக்கின் உடல்நிலை கவலைக்கிடம் – ரசிகர்கள் பிரார்த்தனை !! -01

[ Vivek ]

நடிகர் விவேக்  உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – ரசிகர்கள் பிரார்த்தனை


தமிழ் சினிமாவில் தனது காமெடி மூலம் விழிப்புணர்வு கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நடிகர் விவேக் தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத சிறந்த நடிகர்களில் ஒருவர் . ஒரு சில தினங்களுக்கு முன்பு covid-19 தடுப்பூசி செலுத்திக்கொண்ட விவேக் அனைவரும் கொரோனா விதிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் விவேக்கிற்கு இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது நடிகர் விவேக் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வெளியான செய்தி தமிழக மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து வெளியான தகவலில் இதயம் மற்றும் நுரையீரலை தொடர்ந்து செயல்பட வைக்கும் எக்மோ கருவிகள் மூலம் விவேக்கிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல் நிலையை மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர் விவேக்கின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது என தகவல்கள் பரவி வருகின்றது.

Vivek-விவேக்

இதைத்தொடர்ந்து நடிகர் விவேக் உடல் நலம் தேறி வர வேண்டும் என ஆண்டவனை பிரார்த்தனை செய்வதாக எண்ணற்ற ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.


Star Tamil News           |             Actor Vivek

Leave a Reply

%d bloggers like this: