விஜய்சேதுபதி நடித்த தெலுங்கு படம் 100 கோடி ரூபாய் வசூல்

விஜய்சேதுபதி நடித்த தெலுங்கு படம் 100 கோடி வசூல்

சாதி சாதி கடந்த காதலை மைய கருவாக வைத்து எடுக்கப்பட்ட தெலுங்கு திரைப்படமான உப்பெனா 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளது  என படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் அறிவித்துள்ளது.

 

நடிகர் சாய் தரன் தேஜ்ன் சகோதரர் வைஷ்ணவ் தேஜ் அறிமுக நடிகராக நடித்துள்ள இப்படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டி மற்றும் வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளனர்  இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது இப்படத்தை பார்த்த தெலுங்கின் முன்னணி நடிகர்கள் படக்குழுவினரை நேரில் அழைத்து தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

விஜய்-சேதுபதி

 Vijay sethupathi

இப்படம் வெளியான 3 நாட்களிலேயே 50 கோடி ரூபாய் வசூலை எட்டியது தெலுங்கு படவுலகில் அறிமுக நடிகரின் அதிகபட்ச வசூல் சாதனையாக உப்பெனா திரைப்படம் கருதப்படுகிறது.

மேலும் இப்படத்தின் தமிழ் தயாரிப்பு உரிமையை நடிகர் விஜய் சேதுபதி  வாங்கியுள்ளார் தமிழில்  இப்படத்தில் நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

%d bloggers like this: