[ Vellalar ] தேவேந்திரகுல வேளாளர் சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு – உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு -01

[ Vellalar ]

தேவேந்திரகுல வேளாளர் சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு – உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு


தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் பிரிவில் உள்ள ஏழு உட்பிரிவுகளை இணைத்து அவர்களை தேவேந்திர குல வேளாளர்கள் என்று அழைக்க மத்திய மாநில அரசுகள் சட்டம் நிறைவேற்றியது.

கடையன், கடலாடி, குடும்பன், பன்னாடி, பள்ளர், வாதிரியார் மற்றும் தேவேந்திர குலத்தான் ஆகிய உட்பிரிவுகளை தேவேந்திர குல வேளாளர்கள் என பொதுப் பெயரில் அழைக்கவேண்டும் என அந்த மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று மத்திய அரசு கடந்த மார்ச் 23-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றியது இந்த மசோதா தற்போது குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

இந்த சட்டத் திருத்தத்திற்கு எதிராக தமிழகத்தில் சில வேளாளர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது தொடர்பாக அகில இந்திய வேளாளர் கூட்டமைப்பு மற்றும் வேளாளர் பெயர் பாதுகாப்புக்குழு இணைந்து சில மாதங்களுக்கு முன் வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Vellalar

                             Union Minister

இதைதொடர்ந்து 6 வேளாளர் அமைப்பின் நிர்வாகிகள் டெல்லியில் நேற்று மத்திய சமூக நலத்துறை அமைச்சரை சந்தித்து தங்களது எதிர்ப்பு மனுவை அளித்தனர். அதில் தேவேந்திரகுல வேளாளர் பெயர் சட்ட திருத்தம் தொடர்பாக அமைக்கப்பட்ட பரிசீலனை குழுவில் தமிழ் அறிஞர்கள் வல்லுநர்கள் இடம்பெறவில்லை எனவும் இந்த ஏழு உட் பிரிவினரும் வேளாளர் மரபில் இருந்து வந்தவர்கள் இல்லை எனவும் அதற்கான ஆதாரம் தங்களிடம் இருப்பதாகவும் இது ஒரு தலைப்பட்சமான முடிவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பின் மத்திய அரசின் இந்த சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும் என செய்தியாளர்களிடம் வேளாளர் அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Star Tamil News                                           Vellalar

Leave a Reply

%d bloggers like this: