[ Valimai Update ] வலிமை அப்டேட் கேட்டு வானதி சீனிவாசனை நச்சரிக்கும் அஜித் ரசிகர்கள் !! -03

[ Valimai Update ]

வலிமை அப்டேட் கேட்டு வானதி சீனிவாசனை நச்சரிக்கும் அஜித் ரசிகர்கள்


கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றுள்ளார். அங்கு அவரை எதிர்த்து போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசனை விட சுமார் 1900 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் வானதி சீனிவாசன் சமூக வலைத்தளங்கள் மூலம் வாக்கு சேகரிக்கும் விதமாக அவர் பேசிய வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

Valimai-update

அதை ரீட்வீட் செய்த அஜித் ரசிகர் ஒருவர், வலிமை பட அப்டேட் வேண்டும் என கேட்க அதற்கு பதிலளித்த வானதி சீனிவாசன் நான் வெற்றி பெற்ற உடன் நிச்சயமாக உங்களுக்கு வலிமை பட அப்டேட் கிடைக்கும் தம்பி என கிண்டலாக பதிலளித்தார். வானதி சீனிவாசனின் இந்த கிண்டலான பதில் அப்போது வைரலாகியது.

இந்நிலையில் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றதையடுத்து நீங்கள் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டீர்கள் எங்களுக்கு வலிமை படத்தின் அப்டேட் எப்போது கிடைக்கும் என அஜித் ரசிகர்கள் டுவிட் செய்து வருகின்றனர்.


Star Tamil News  |   Valimai Update

Leave a Reply

%d bloggers like this: