[ valimai ] மே 1 வெளியாகிறது வலிமை படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் !!

Valimai Update

தல பிறந்தநாள் அன்று வெளியாகிறது வலிமை படத்தின்  ஃபர்ஸ்ட் லுக்.

அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் வெளிவர இருக்கும் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மே 1-ஆம் தேதி வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

 அஜித் நடிப்பில்  வெளிவர இருக்கும் வலிமை திரைப்படத்தை நேர்கொண்ட பார்வை படத்தின் இயக்குனர் வினோத் இயக்குகிறார் , இப்படத்தின் இசையை பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தை மறைத்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் ஜீ ஸ்டூடியோஸ் தயாரிக்கின்றது.

Valimai

 

வலிமை அப்டேட்

வலிமை படம் குறித்த ஆர்வமிகுதியால்  சில ரசிகர்களின் விரும்பத்தகாத செயல்களால் வருத்தம் அடைந்த அஜித் கடந்த மாதம் அது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார் அதில் சிலர் ரசிகர்கள் என கூறிக்கொண்டு வலிமை  அப்டேட் குறித்து கிரிக்கெட் மைதானம், அரசியல் தளங்களில் கேள்வி எழுப்பியது என்னை வருத்தமடையச் செய்துள்ளது படம் குறித்தான அறிவிப்பு உரிய நேரத்தில் வெளியாகும்.

சினிமா உங்களுக்கு பொழுதுபோக்கு எனக்கு அது தொழில் எனவே அது குறித்து தயாரிப்பாளருடன் ஆலோசித்து தான் முடிவு செய்ய முடியும் நாம் செய்யும் செயலை வைத்து தான் இந்த சமூகம் நம்மை மதிக்கும் எனவே பொதுவெளியில் என் ரசிகர்கள் கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும் என் மீது உண்மையான அன்பு உள்ளவர்கள் இதை பின்பற்றுவீர்கள்  என நம்புகிறேன் என அறிவித்திருந்தார் .

போனி கபூர் அறிவிப்பு

Valimai update 

இந்நிலையில் தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் மே1 தேதி வெளியாகும்  என அறிவித்திருக்கிறார் இந்த அறிவிப்பு  அஜித்  ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Leave a Reply

%d bloggers like this: