[ Vaiko ] 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் ஸ்டாலினுக்கு வைகோ கோரிக்கை !! -03

[ Vaiko ]

7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் முக ஸ்டாலினுக்கு வைகோ கோரிக்கை


மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது

தவறுகள் ஏதும் செய்யாமல் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்ற ஏழு பேரில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேரும் மரண தண்டனை கைதிகளாகவே மனதளவில் சித்திரவதைகளை அனுபவித்து வருகின்றனர். அதேபோன்று நளினி , ரவிச்சந்தின், ராபர்ட், பயாஸ், ஜெயக்குமார் ஆகியோரின் வாழ்க்கையும் இருண்டு பாழாகிபோனது.

Vaiko

Also Read : புதுவை முதல்வர் ரங்கசாமிக்கு கொரோனா சென்னை மருத்துவமனையில் அனுமதி !!

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி அளித்த தீர்ப்பில் இந்த ஏழு பேரை விடுதலை செய்யும் விசயத்தில் தமிழக அரசே முடிவெடுக்கலாம் என கூறிய பின்னரும் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக தமிழக அரசு அவர்களை விடுதலை செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி ஆளுநருக்கு கோரிக்கை விடுத்தும் ஆளுநர் அந்த கோரிக்கைகளை குப்பை தொட்டியில் போடுவது போல் போட்டுவிட்டார்.

இந்த விடுதலை தொடர்பான பிரச்சினை குறித்து மத்திய அரசாங்கத்திடம் கருத்து கேட்க வேண்டிய அவசியம் எதுவும் மாநில அரசுக்கு கிடையாது. ஆனால் மத்திய அரசிடம் இதுகுறித்து கருத்து கேட்டதாகவும் ஆனால் மத்திய அரசு அதற்கு முட்டுக்கட்டை போடுவதாகவும் போலியான நாடகங்களை இதுவரை நடத்தி வந்தனர்.

7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை ஏற்கனவே திமுக வலியுறுத்தி வந்துள்ளது. ஆகவே தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இந்த ஏழு பேரையும் விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்து கோடிக்கணக்கான தமிழர்களின் மனதில் பால்வார்க்கும் செய்தியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மதிமுக. சார்பில் அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குறிப்பிட்டுள்ளார்.

Also Read : புதுவை முதல்வர் ரங்கசாமிக்கு கொரோனா சென்னை மருத்துவமனையில் அனுமதி !!


Star Tamil News   |    Vaiko

Leave a Reply

%d bloggers like this: