[ Us Troops ] செப்டம்பர் 11-க்குள் ஆப்கனில் உள்ள அமெரிக்க துருப்புகள் முற்றிலும் வாபஸ்

[ Us Troops ]

செப்டம்பர் 11 க்குள் ஆப்கனில் உள்ள அமெரிக்க துருப்புகள் முற்றிலும் வாபஸ்


ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க ராணுவத்தை வரும் செப்டம்பர் 11ஆம் தேதிக்குள் அமெரிக்கா முற்றிலும் வாபஸ் பெற உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள உலக வர்த்தக மைய கட்டிடம் மற்றும் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து இந்த தாக்குதலை திட்டமிட்டு செயல்படுத்திய ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்த தாலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் நாட்டின் மீது போர் தொடுத்தது அமெரிக்கா.

இதைத்தொடர்ந்து தலைமறைவான ஒசாமா பின்லேடனை தேடும் பணி மற்றும் தீவிரவாத தாக்குதல்களை முறியடிக்கும் விதமாக ஆப்கன் புதிய அரசுடன் இணைந்து அமெரிக்க ராணுவத்தினர் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.

ஒருவழியாக 2011ஆம் ஆண்டு நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பின் ஒசாமா பின்லேடனை பாகிஸ்தானில் வைத்து அமெரிக்க படையினர் சுட்டுக்கொன்றனர்.
அதன் பின்னர் அமெரிக்கப் துருப்புகள் ஆப்கானிஸ்தானிலிருந்து படிப்படியாக வாபஸ் பெறப்பட்டு வருகின்றனர்.

Us-troops

இந்நிலையில் வரும் செப்டம்பர் 11ஆம் தேதி இரட்டை கோபுர தாக்குதலின் 20 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது. அதற்குள் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படையினரை முற்றிலும் வாபஸ் பெற வேண்டும் என்பதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதியாக உள்ளதாகவும். இதுகுறித்து ஓரிரு தினங்களில் ஜோ பைடன் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Star Tamil News                                            Us Troops

Leave a Reply

%d bloggers like this: