[ US Navy ] அனுமதியின்றி இந்திய கடற்பரப்பில் அமெரிக்க போர் கப்பல் பயிற்சி – இந்தியா கண்டனம் !!-05

[ US Navy ]

அனுமதியின்றி இந்திய கடற்பரப்பில் அமெரிக்க போர் கப்பல் பயிற்சி இந்தியா கண்டனம்


லட்சத்தீவு அருகே இந்தியா பிரத்தியேக பொருளாதார மண்டலமாக வரையறுக்கப்பட்டுள்ள பகுதிக்குள் அமெரிக்காவின் யூஎஸ்எஸ் ஜான் பால் ஜோன்ஸ் தாக்குதல் போர்க்கப்பல் பயிற்சி மேற்கொண்டுள்ளது.

கரையிலிருந்து சுமார் 370 கிலோமீட்டர் தொலைவு என்பது பிரத்தியேக பொருளாதார மண்டலமாக இந்தியாவால் அறிவிக்கப்பட்டு அதற்கான விதிகள் வரையறுக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்பகுதிக்குள் மற்ற நாட்டு கடற்படைகள் நடவடிக்கைகள் மேற்கொள்வதாக இருந்தால் இந்தியாவின் அனுமதி பெற்றிருக்க வேண்டும் .

Us-navy

 

இந்நிலையில் முன் அனுமதி ஏதும் பெறாதது குறித்து இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பாரசீக வளைகுடாவில் இருந்து மலாக்கா நீரிணை வரை அமெரிக்க கப்பல் பயிற்சிக்காக பயணம் மேற்கொண்டதை இந்தியா கண்காணித்து வந்தது. லட்சத்தீவு அருகே 140 கடல் மைல் தொலைவில் முன் அனுமதி பெறாமல் பயிற்சி பயணம் மேற்கொண்டதற்காக அமெரிக்காவிடம் தூதரகம் வாயிலாக இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் ஐநாவின் விதிப்படி ஒரு நாட்டின் பொருளாதார மண்டலத்திற்குள் வேறு நாட்டு இராணுவங்கள் பயிற்சிகள் மேற்கொள்வதாக இருந்தால் அந்நாட்டிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் தென்சீனக் கடலில் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்கும் நோக்குடன் அமெரிக்கா இவ்வாறான கடற்படை பயிற்சிகளை மேற்கொள்வது வழக்கமான ஒன்று.


Star Tamil News                                  Us Navy

Leave a Reply

%d bloggers like this: