[ Us Casino Firing ] சூதாட்ட விடுதியில் துப்பாக்கிச் சூடு 2 பேர் பலி – அமெரிக்கா !!

[ Us Casino Firing ]

சூதாட்ட விடுதியில் துப்பாக்கிச் சூடு 2 பேர் பலி – அமெரிக்கா


அமெரிக்காவின் விஸ்காசின் மாகாணத்தில் உள்ள பிரவுன் நகரில் சூதாட்ட விடுதி ஒன்றில் நேற்று முன்தினம் இரவு இளைஞர்கள் பெரியவர்கள் என ஏராளமானோர் சூதாட்டங்களை விளையாடி கொண்டிருந்தனர்.‌

அப்போது சூதாட்ட விடுதிகள் கை துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கு சூதாடி கொண்டிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

இதையடுத்து அங்கு பெரும் பதற்றமும் பீதியும் உருவாகியது.‌ சூதாட்ட விடுதியில் இருந்த அனைவரும் தங்கள் உயிரை காத்துக்கொள்ள அங்கும் இங்குமாக ஓட்டம் பிடித்தனர்.‌

ஆனாலும் விடாத அந்த மர்ம நபர் தனது துப்பாக்கியால் தொடர்ந்து சுட்டு கொண்டே இருந்தார். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படு காயமடைந்தார்.

Us-casino-firing

இந்நிலையில் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சூதாட்ட விடுதி முழுவதையும் சுற்றி வளைத்து அதை தங்கள் கட்டுப்பாட்டு வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.

இதனை தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்திய அந்த மர்ம நபரை தங்களிடம் சரணடையும்படி காவல்துறையினர் பலமுறை எச்சரித்தனர். ஆனால் அந்த மர்ம நபர் காவல்துறையினரின் எச்சரிக்கைக்கு செவி சாய்க்காமல் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட முயன்றார். இதையடுத்து உஷாரான காவல்துறையினர் அந்த மர்ம நபரை சுட்டு வீழ்த்தினர். இதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

துப்பாக்கி சூடு நடத்திய நபர் யார் அதற்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியாத நிலையில் காவல்துறையினர் இதுகுறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

அதேநேரம் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தனிப்பட்ட விரோதம் காரணமாக நடந்ததுள்ளது எனவும் இதனால் பொது சமூகத்துக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.


Star Tamil News    |    Us Casino Firing

Leave a Reply

%d bloggers like this: