[ Army Attack ] 30 தீவிரவாதிகளை வேட்டையாடிய ஆப்கன் ராணுவம் !!

[ Army Attack ]

30 தீவிரவாதிகளை வேட்டையாடிய  ராணுவம்

ஆப்கானிஸ்தான் நாட்டில் பல ஆண்டுகளாக தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக ஆப்கன் மற்றும் அமெரிக்க ராணுவங்கள் போராடி வருகிறது.

இந்த போராட்டங்களுக்கு முடிவு கட்ட எண்ணிய அமெரிக்க மற்றும் ஆப்கன் அரசுகள் தலிபான்களுடன் கத்தார் தலைநகர் தோகாவில் கடந்தாண்டு அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படாததால் சமீப காலங்களில் தாலிபான் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்தன குறிப்பாக ராணுவம் மற்றும் போலீசாரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் அரசு தரப்பிற்கு அதிக உயிர் சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டது.

Army

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆப்கானிஸ்தான் ராணுவம் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தியது இதைத்தொடர்ந்து கந்தகார் நகரின் அருகே உள்ள ஜவாரி  எனும் மாவட்டத்தில் தாலிபன் தீவிரவாதிகள்  நிலை கொண்டுள்ளதாக  கிடைத்த தகவல் படி ராணுவம் தீவிரவாதிகளின் நிலையை குறிவைத்து தாக்குதல் நடத்தியது இந்தத் தாக்குதலில் 30 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் 10க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் படுகாயமடைந்துள்ளனர் எஞ்சிய தீவிரவாதிகள் ராணுவத்தின் இந்த எதிர்பாராத இந்த  தாக்குதலை சமாளிக்க முடியாமல் தப்பி ஓடினர்.

 

Leave a Reply

%d bloggers like this: