[ Uber ] மாற்றுத்திறனாளிகள் இலவச கால் டாக்சி சேவையை பயன்படுத்தி வாக்களிக்க செல்லலாம் தேர்தல் ஆணையம் அறிவிப்பு !!-01

[ Uber ]

மாற்றுத்திறனாளிகள் இலவச கால் டாக்சி சேவையை பயன்படுத்தி வாக்களிக்க செல்லலாம் தேர்தல் ஆணையம் அறிவிப்பு


தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளதையொட்டி மூத்த குடிமக்கள் மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க தேர்தல் ஆணையம் சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

அந்த வகையில் நாளை வாக்களிக்க வரும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் Uber நிறுவனத்தின் இலவச கால் டாக்ஸி சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என தமிழகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Uber

இது குறித்து தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு வெளியிட்ட அறிவிப்பில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களின் ஜனநாயக கடமைகளை ஆற்ற சென்னை , கோவை, திருச்சி போன்ற நகரங்களில் ஊபர் நிறுவனம் மற்றும் தேர்தல் ஆணையம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த இலவச கால் டாக்ஸி சேவையை பயன்படுத்தி 5 கிலோ மீட்டர் சுற்றளவில் வீட்டிலிருந்த வாக்குச்சாவடிக்கு சென்று திரும்பலாம் எனவும் இதற்கு கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை எனவும் இந்த பயணத்திற்கான முன்பதிவை Uber செயலி மூலம் பதிவு செய்து கொள்ளும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.


Star Tamil News          Free Ride For Poll

Leave a Reply

%d bloggers like this: