01-பிரதமரின் தாயார் குறித்து அவதூறு பேச்சு. ட்ரெண்ட் ஆனது #boycottbbc

பிரதமரின் தாயார் குறித்து அவதூறு பேச்சு. ட்ரெண்ட் ஆனது #boycottbbc 

பிரபல செய்தி நிறுவனமான பிபிசியின் துணை நிறுவனமான பிபிசி ரேடியோவில் பிக் டிபெட் என்கிற விவாத நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரிட்டனில் சீக்கியர்களும் இந்தியர்களும் எதிர்கொள்ளும் இனப்பாகுபாடு குறித்து விவாதம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி சுமார் 3 மணி நேரம் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தொலைபேசி வாயிலாக சிலர் கலந்து கொண்டனர் அவ்வாறு கலந்து கொண்ட சைமன்  என்ற நபரின் பேச்சுக்கள் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமரின்

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சைமன் என்பவர் இந்திய அரசு கொண்டுவந்துள்ள  புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்துப் போராடும் விவசாயம் குறித்து பேசினார் பேச்சின் முடிவில் உணர்ச்சிவசப்பட்டு பிரதமரின் தாயார் குறித்து அச்சில் ஏற்ற முடியாத தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி கடுமையாக பேசினார் .

பிபிசியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சைமனின் சர்ச்சையான கருத்துக்களை நீக்காமல் பிபிசி பதிவேற்றம் செய்துள்ளது. இது தற்போது இந்தியர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது அதன் வெளிப்பாடாக  டுவிட்டரில் #Boycottbbc என்கிற ஹாஸ்டேகை இந்தியர்கள் டிரண்ட் செய்து வருகின்றனர்.

 

 

 

Leave a Reply

%d bloggers like this: