[ Treasure ] தூத்துக்குடி மாவட்டத்தில் புதையலுக்கு ஆசைப்பட்டு சுரங்கம் தோண்டிய இருவர் உயிரிழப்பு !! -05

[ Treasure ]

தூத்துக்குடி மாவட்டத்தில் புதையலுக்கு ஆசைப்பட்டு சுரங்கம் தோண்டிய இருவர் உயிரிழப்பு !!


தூத்துக்குடி அருகே மாந்திரீகவாதியின் பேச்சை கேட்டு புதையலுக்கு ஆசைபட்டு சுரங்கம் தோண்டிய இருவர் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர் மேலும் இரண்டு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே திருவள்ளுவர் காலனியைச் சேர்ந்த சிவவேலன், சிவமலை என்கிறார் சகோதரர்கள் மற்றும் அவர்களின் நண்பர்கள் இருவருடன் சேர்ந்து தங்கள் வீட்டின் அருகே உள்ள இடத்தில் புதையல் இருப்பதாக மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு கடந்த சில வாரங்களாக யாருக்கும் தெரியாமல் சுமார் 50 அடி ஆழத்திற்கு குழிதோண்டி பின்னர் அதன் பக்கவாட்டில் 5 அடி விட்டதற்கு சுரங்கம் தோண்டி வந்துள்ளனர்.

Treasure

இந்நிலையில் சுரங்க வேலையில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு சிவவேலனின் மனைவி தண்ணீர் எடுத்துச் சென்றிருக்கிறார் அப்போது சுரங்க வேலைகளில் ஈடுபட்டிருந்தார் நால்வரும் மயங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தவர் விரைந்து சென்று அக்கம்பக்கத்தினர் உதவியை நாடியுள்ளார் மேலும் இது குறித்து நாசரேத் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தான்குளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் நாசரேத் தீயணைப்புத்துறையினர் நான்கு பேரையும் மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் செல்லும் வழியில் கணபதி , ரகுபதி என்கிற இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் சிவவேலன் மற்றும் சிவமலை ஆகிய இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Star Tamil News                                 Treasure

 

Leave a Reply

%d bloggers like this: