[ Traffic Cops ] போக்குவரத்து காவல் ஆய்வாளரை சரமாரியாக தாக்கும் பொதுமக்கள் !! – 01

[ Traffic Cops ]

போக்குவரத்து காவல் ஆய்வாளரை சரமாரியாக தாக்கும் பொதுமக்கள்


கர்நாடக மாநிலம் மைசூர் அருகே உள்ள விஜயநகரம் காவல் நிலையத்தை சேர்ந்த போக்குவரத்து ஆய்வாளர் ஒருவரை பொதுமக்கள் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கடந்த திங்கள் கிழமை அன்று விஜயநகரம் போக்குவரத்து போலீசார் மைசூரின் சுற்றுவட்ட சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அவ்வழியே வந்த ஒரு இருசக்கர வாகனத்தை தடுத்த போது இருசக்கர வாகனத்தில் வந்தவர் எதிர்பாராதவிதமாக நிலைகுலைந்து கீழே விழுந்து உயிரிழந்தார் இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் போக்குவரத்து காவல் ஆய்வாளரை சரமாரியாக தாக்கினர் அவர்களிடமிருந்து தப்பிய போக்குவரத்து ஆய்வாளர் பொதுமக்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

Traffic-Cops

இதுதொடர்பாக போக்குவரத்து காவல் ஆய்வாளர் தரப்பில் தெரிவிக்கையில் வழக்கமான வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டு இருந்ததாகவும் அப்போது அவ்வழியே அதிவேகமாக வந்த இருசக்கர வாகனத்தை தடுத்தபோது வாகனத்தில் வந்தவர் உடனடியாக நிறுத்த முற்பட்டபோது நிலை தடுமாறி கீழே விழுந்ததாகவும் தெரிவித்தனர்.

மேலும் போக்குவரத்து காவல் ஆய்வாளரை தாக்கிய வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Star Tamil News                          Traffic Cops

Leave a Reply

%d bloggers like this: