Today Rasi Palan – இன்றைய ராசி பலன்  28/05/2021

Today Rasi Palan

இன்றைய ராசி பலன்
28/05/2021


மேஷம்

Today-rasi-palan

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று- கணவன் மனைவியிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகி அன்பு அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு சீராக இருக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து திட்டமிடுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள் :- 3,9

 

ரிஷபம்

Today-rasi-palan

ரிஷப ராசிகாரர்களுக்கு இன்று – உறவினர்களால் சில தர்ம சங்கடமான சூழ்நிலைகளில் சிக்கித் தவிப்பீர்கள். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலையே காணப்படும். குடும்பத்தில் பல வேலைகளை நீங்களே பார்க்க வேண்டியது வரும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 5

 

மிதுனம்

Today-rasi-palan

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று – உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். பெற்றோர்களின் ஆரோக்கியம் மேம்படும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 2,8

கடகம்

Today-rasi-palan

கடக ராசிக்காரர்களுக்கு இன்று- மனக்குழப்பங்கள் நீங்கி உற்சாகமாக காணப்படுவீர்கள். திறமையுடன் செயல்பட்டு சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். வேற்று மதத்தினரால் நன்மை உண்டாகும். முன்கோபம் வீண் அலைச்சல்கள் விலகும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 1

சிம்மம்

Today-rasi-palan

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று – வீண் டென்ஷன் அலைச்சல் நீங்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பு உயரும். கடனை செட்டில் செய்யுமளவிற்கு பணவரவு இருக்கும்.

அதிஷ்ட எண்கள்:- 7,9

கன்னி

Today-rasi-palan

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று – குடும்பத்தினருடன் ஆலோசித்து சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். வேலை தொடர்பாக எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நன்மை.

அதிர்ஷ்ட எண்கள்:- 4

துலாம்

Today-rasi-palan

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று – திடீர் வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். பிரியமானவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். தாய்வழி உறவினர்களால் நன்மை உண்டாகும். எதிர்கால தேவைகளுக்காக திட்டங்களை தீட்டுவீர்கள். ஆன்மீகத்தில் அதிக நாட்டம் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 3,5

 

Also Read : கொரோனா நோயாளிகளை மருத்துவமனைகளில் சந்திக்க தடை – தமிழக அரசு !!

 

விருச்சிகம்

Today-rasi-palan

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று – பிள்ளைகளால் சமூகத்தில் உங்கள் மதிப்பு உயரும். கணவன் மனைவியிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். அநாவசிய செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 2

தனுசு

Today-rasi-palan

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று – கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்சனைகள் வந்து நீங்கும். அடுத்தடுத்த வேலைகளால் சோர்வாக காணப்படுவீர்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது.

அதிர்ஷ்ட எண்கள்:- 1,3

மகரம்

Today-rasi-palan

மகர ராசிக்காரர்களுக்கு இன்று – எதிலும் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம். சுபச் செலவுகள் அதிகரிக்கும். வீட்டின் அடிப்படை தேவைகளை மேம்படுத்துவீர்கள். யாருக்கும் பணம் வாங்கித் தருவதில் தலையிட வேண்டாம்.

அதிர்ஷ்ட எண்கள்:- 2,5

 

கும்பம்

Today-rasi-palan

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று – பூர்விக சொத்து சம்பந்தமான பிரச்சனைகளுக்கு சுமுகமான தீர்வு காண்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிட்டும். உங்கள் எண்ணம் போல் மற்றவர்களும் செயல்பட வேண்டும் என்று எண்ணுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 6

மீனம்

Today-rasi-palan

மீன ராசிக்காரர்களுக்கு இன்று – மனைவி வழி உறவினர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவீர்கள். வீட்டை விரிவுப்படுத்தி கட்டுவது குறித்து குடும்பத்தினருடன் ஆலோசனை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 3,7

Also Read : காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் கொரோனாவுக்கு பலி !!


Star Tamil News  |  Today Rasi Palan

Leave a Reply

%d bloggers like this: