Today Rasi Palan – இன்றைய ராசி பலன்  19/05/2021

Today Rasi Palan

இன்றைய ராசி பலன்
19/05/2021


மேஷம்

Today-rasi-palan

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று- பிள்ளைகளின் விருப்பு வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை வழி நடத்துவீர்கள். உங்கள் உழைப்புக்கேற்ப வருமானம் உயரும். கணவன் மனைவியிடையே இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண்கள் :- 5,9

 

ரிஷபம்

Today-rasi-palan

ரிஷப ராசிகாரர்களுக்கு இன்று – பெற்றோர்களுக்கு மருத்துவ செலவுகள் வரக்கூடும். பழைய இனிமையான சம்பவங்களை நினைத்து மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 3,9

 

மிதுனம்

Today-rasi-palan

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று – பூர்வீக சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். உடன்பிறந்தவர்களால் சில காரியங்கள் நிறைவேறும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 2,6

கடகம்

Today-rasi-palan

கடக ராசிக்காரர்களுக்கு இன்று- நேர்மறை சிந்தனைகள் பிறக்கும். உடல்நிலை சீராகும். கணவன் மனைவியிடையே இருந்துவந்த பிரச்சினைகள் நீங்கி அன்பு அதிகரிக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 1,7

சிம்மம்

Today-rasi-palan

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று – தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கி தவிப்பீர்கள். வாகனங்கள் வழியில் வீண் செலவு ஏற்படக்கூடும். வேலைகள் நீண்ட இழுபறிக்கு பின்பு முடியும். சிறுசிறு பிரச்சனைகள் குடும்பத்தில் தலைதூக்கும்.

அதிஷ்ட எண்கள்:- 6,9

கன்னி

Today-rasi-palan

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று – எதிர்பாராத செலவுகளால் பிறரிடம் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படும். வீண் அலைச்சலுக்கு உள்ளாவீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து நடந்து கொள்வது நன்மை .

அதிர்ஷ்ட எண்கள்:- 4

துலாம்

Today-rasi-palan

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று – மனக்கசப்புகளால் விலகியிருந்த உறவினர்கள் தேடி வருவார்கள். ஊர் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். ஆன்மிக பெரியோரின் ஆசி கிட்டும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 5,9

 

Also Read : குடத்திற்குள் சிக்கி கொண்ட சிறுவனின் தலை கடும் போராட்டத்திற்கு பின் மீட்பு !!

 

விருச்சிகம்

Today-rasi-palan

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று – அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிட்டும். புதிய பொறுப்புகள் பதவிகள் தேடி வரும். நண்பர்கள் உறவினர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகளை எடுப்பார்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 1

 

தனுசு

Today-rasi-palan

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று – குடும்பத்தினர் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். திடீர் திருப்பங்கள் உண்டாகக்கூடும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 3,5

மகரம்

Today-rasi-palan

மகர ராசிக்காரர்களுக்கு இன்று – குடும்பத்தில் உள்ளவர்களுடன் அனுசரித்து செல்லுங்கள். சிலரின் விமர்சனங்களுக்கும் கேலி பேச்சுக்கும் ஆளாக நேரிடலாம். வீடு மாற நினைப்பவர்களுக்கு நல்ல வீடு அமையும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 9

கும்பம்

Today-rasi-palan

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று – உடன்பிறந்தவர்கள் இடையே ஒற்றுமை பிறக்கும். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வாய்ப்புகள் தேடிவரும். விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 1,6

மீனம்

Today-rasi-palan

மீன ராசிக்காரர்களுக்கு இன்று – பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த பிரச்சனைகளுக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். பிள்ளைகளால் உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் உங்கள் அந்தஸ்து உயரும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 2

Also Read : செவ்வாய் கிரகத்திலும் கொரோனாவை பரப்பாதீர்கள் சீனாவை கலாய்க்கும் நெட்டிசன்கள் !!


Star Tamil News  |  Today Rasi Palan

Leave a Reply

%d bloggers like this: