Today Rasi Palan – இன்றைய ராசி பலன்  17/05/2021- !!

Today Rasi Palan

இன்றைய ராசி பலன்
17/05/2021


மேஷம்

Today-rasi-palan

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று- உறவினர்களிடையே மனக்கசப்புகள் வந்து நீங்கும். புதிய வீடு மனை வாகனங்கள் வாங்கும் யோசனை பிறக்கும். வெளிநாடுகளிலிருந்து நல்ல செய்தி வரும். உடன்பிறந்தவர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள்.

அதிர்ஷ்ட எண்கள் :- 4

 

ரிஷபம்

Today-rasi-palan

ரிஷப ராசிகாரர்களுக்கு இன்று – பழைய கடன்களை திரும்ப செலுத்த வழி பிறக்கும். பிரச்சினைகளை தைரியமாக எதிர்கொண்டு சமாளிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். தோல்வி பயம் நீங்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 1,3

 

மிதுனம்

Today-rasi-palan

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று – குடும்பத்தினரின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். கணவன் மனைவியிடையே இருந்துவந்த பிரச்சினைகள் நீங்கி ஒற்றுமை பிறக்கும். வீண் செலவுகள் குறையும். ஆரோக்கியம் மேம்படும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 7

கடகம்

Today-rasi-palan

 

கடக ராசிக்காரர்களுக்கு இன்று- ஆன்மீகம் யோகா தியானம் போன்றவற்றில் ஈடுபாடு ஏற்படும். எந்த சூழலிலும் நிதானத்தை இழக்காதீர்கள். கடந்த காலத்தில் தவறவிட்ட நல்ல வாய்ப்புகளை நினைத்து வருந்துவீர்கள். மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும் எச்சரிக்கையாக இருங்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 2,5

சிம்மம்

Today-rasi-palan

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று – வழக்குகள் சம்பந்தமான விசயங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நன்மை. அரசு மற்றும் வங்கி சம்பந்தப்பட்ட காரியங்களில் தடைகள் ஏற்படக்கூடும். நீண்ட நாள் பழகிய நண்பரின் நட்பை இழக்க நேரிடலாம்.

அதிஷ்ட எண்கள்:- 1,7

கன்னி

Today-rasi-palan

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று – குடும்பத்தினரிடையே உங்கள் மதிப்பு உயரும். உங்களின் பலம் பலவீனத்தை அறிந்து அதற்கேற்றாற்போல் செயல்படுவீர்கள். நீங்கள் கடந்து வந்த கசப்பான சம்பவங்கள் நினைவுக்கு வரும். புதிய திட்டங்களை நிறைவேற்றுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 5,9

துலாம்

Today-rasi-palan

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று – உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். பிள்ளைகளால் சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். அவர்களது எதிர்காலம் குறித்த அச்சம் கவலைகள் நீங்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். ஆன்மீகத்தில் மனம் நாட்டம் செல்லும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 3,6

 

Also Read : காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் கொரோனாவுக்கு பலி !!

 

விருச்சிகம்

Today-rasi-palan

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று – பழைய கடன்களைத் தீர்க்க புது வழி பிறக்கும். பணவரவு பொருள் வரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் உருவாகும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 4,7

தனுசு

Today-rasi-palan

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று – வீண் செலவுகளால் திணறுவீர்கள். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டாகும். வாகனங்களில் செல்லும் போது அதீத கவனம் தேவை. உங்கள் சக்தியை மீறி யாருக்கும் எந்த உறுதிமொழியையும் தரவேண்டாம்.

அதிர்ஷ்ட எண்கள்:- 1,5

மகரம்

Today-rasi-palan

மகர ராசிக்காரர்களுக்கு இன்று – சாதுரியமாக செயல்பட்டு பல காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். யதார்த்தமாகவும் இயல்பாகவும் பேசி எல்லோருடைய மனதிலும் இடம் பிடிப்பீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 4,8

 

கும்பம்

Today-rasi-palan

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று – நீண்டநாள் இழுபறியாக இருந்து வந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாக மாறும். கடந்த காலங்களில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் தற்போது ஆதரவாக நெருங்கி வர வாய்ப்பு உள்ளது. திடீர் வெளியூர் பயணங்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 3,9

மீனம்

Today-rasi-palan

மீன ராசிக்காரர்களுக்கு இன்று – நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். முன்கோபம் நீங்கும். குழந்தைகள் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். பழைய நண்பர் நீண்ட நாட்களுக்கு பின்பு உங்களை தொடர்பு கொள்வார் .

அதிர்ஷ்ட எண்கள்:- 6

 

Also Read : செவ்வாய் கிரகத்திலும் கொரோனாவை பரப்பாதீர்கள் சீனாவை கலாய்க்கும் நெட்டிசன்கள் !!


Star Tamil News  |  Today Rasi Palan

Leave a Reply

%d bloggers like this: