Today Rasi Palan – இன்றைய ராசி பலன் 16/05/2021 !!

Today Rasi Palan

இன்றைய ராசி பலன்
16/05/2021


மேஷம்

Today-rasi-palan

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று- பணவரவு சிறப்பாக இருக்கும். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். சாதுரியமாக சில திட்டங்களை தீட்டுவீர்கள். உங்கள் ஆலோசனைகளை குடும்பத்தினர் ஏற்று கொள்வார்கள்.

அதிர்ஷ்ட எண்கள் :- 3,7

 

ரிஷபம்

Today-rasi-palan

ரிஷப ராசிகாரர்களுக்கு இன்று – புதிய நட்புகளால் உற்சாகமடைவீர்கள். எதிர்காலத் தேவைக்காக சில புதிய முடிவுகளை எடுப்பீர்கள். கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 9

 

மிதுனம்

Today-rasi-palan

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று – அடுத்தவர்களின் விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம். வாகனங்கள் வழியில் வீண் செலவுகள் ஏற்படும். அடுத்தவர்களை நம்பி நீங்கள் ஒப்படைத்த சில காரியங்கள் முடிவடையாமல் இழுபறியாகவே நீடிக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 7,9

கடகம்

Today-rasi-palan

கடக ராசிக்காரர்களுக்கு இன்று- நீண்ட இழுபறிக்குப் பின் சில காரியங்களை முடிக்க வேண்டியது இருக்கும். கடன் சுமையை தீர்க்க புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தந்திரமாக பேசுபவர்களை நம்பி ஏமாந்து விடாதீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 1,9

 

சிம்மம்

Today-rasi-palan

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று – குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு உயரும். தவறு செய்யும் நபர்களை துணிவுடன் தட்டி கேட்பீர்கள். செலவுகளை கட்டுப்படுத்தி எதிர்காலத் தேவைக்காக சேமிக்க தொடங்குவீர்கள்.

அதிஷ்ட எண்கள்:- 4

கன்னி

Today-rasi-palan

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று – நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த காரியங்கள் மளமளவென்று நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 2,8

துலாம்

Today-rasi-palan

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று – நீண்ட காலப் பிரச்சினைகளுக்கு புதிய அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். பழுதான வாகனத்தை சீர் செய்வீர்கள். குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 6

 

Also Read : கொரோனாவுக்கு பலியான மம்தா பானர்ஜியின் சகோதரர் !!

 

விருச்சிகம்

Today-rasi-palan

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று – உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். புதிய முயற்சிகள் நீண்ட இழுபறிக்கு பின்பே முடிவடையும். நண்பர்கள் உறவினர்களின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். திடீர் வாகன செலவுகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 4,6

தனுசு

Today-rasi-palan

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று – நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த உதவி கிடைக்கும். புதிய நட்புகளால் உற்சாகமடைவீர்கள். உடன்பிறந்தவர்கள் இடையே ஒற்றுமை அதிகரிக்கும். வீண் செலவுகளை தவிர்ப்பது நன்மை.

அதிர்ஷ்ட எண்கள்:- 1,7

மகரம்

Today-rasi-palan

மகர ராசிக்காரர்களுக்கு இன்று – குடும்பத்தினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். அரசாங்கம் தொடர்பாக இழுபறியாக இருந்து வந்த காரியங்கள் உங்களுக்கு சாதகமாக முடியும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 3,5

கும்பம்

Today-rasi-palan

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று – உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். பெற்றோர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 2,4

மீனம்

Today-rasi-palan

மீன ராசிக்காரர்களுக்கு இன்று – எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். பெற்றோர்களின் உடல் நலத்தில் கவனம் தேவை. கடினமான உழைப்பால் இலக்கை எட்டிப் பிடிப்பீர்கள். கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 1

Also Read : இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ட்ரோன்கள் !!


Star Tamil News  |  Today Rasi Palan

Leave a Reply

%d bloggers like this: