Today Rasi Palan – இன்றைய ராசி பலன்  11/05/2021

Today Rasi Palan 
இன்றைய ராசி பலன் 
11/05/2021


மேஷம்

Today-rasi-palan

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று- அடுத்தவர்களின் வேலைகளில் தலையிடாமல் தவிர்த்து கொள்ளுங்கள். குடும்பத்தினருடன் அனுசரித்து சொல்லுங்கள். வீண் விவாதங்களை தவிர்ப்பது வாகனத்தில் பயணம் செய்யும்போது எச்சரிக்கையாக இருப்பதும் அவசியம்.

அதிர்ஷ்ட எண்கள் :- 6

ரிஷபம்

Today-rasi-palan

ரிஷப ராசிகாரர்களுக்கு இன்று – யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திடவோ உத்திரவாதம் தரவோ வேண்டாம். குடும்பத்தினரிடம் உங்கள் கோபத்தை காட்ட வேண்டாம். செய்யும் காரியங்களில் தடைகள் ஏற்பட்டாலும் உங்கள் விடாமுயற்சியால் வெற்றி பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 4,6

மிதுனம்

Today-rasi-palan

 

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று – அரசாங்க உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். கணவன் மனைவியிடையே இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கி அன்பு அதிகரிக்கும். ஆன்மீகத்தில் மனம் நாட்டம் செல்லும். ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 3

Also Read : 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் ஸ்டாலினுக்கு வைகோ கோரிக்கை !!

கடகம்

Today-rasi-palan

கடக ராசிக்காரர்களுக்கு இன்று- உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். உங்கள் சிந்தனை மற்றும் செயல்திறன் அதிகரிக்கும். இழுபறியாக இருந்து வந்த காரியங்கள் நிறைவேறும். திருமணம் உள்ளிட்ட சுபகாரிய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 5

சிம்மம்

Today-rasi-palan

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று – உறவினர்களால் நன்மை உண்டாகும். வீடு வாகனங்களை சீர் செய்வீர்கள். நீண்டநாள் கிடப்பில் போட்ட வேலைகளை செய்து முடிப்பீர்கள். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவீர்கள் பணவரவு சீராக இருக்கும்.

அதிஷ்ட எண்கள்:- 2

கன்னி

Today-rasi-palan

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று – அடுத்தவர்களின் மனம் புண்படும்படி பேசாதீர்கள். உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை தலைதூக்கும். அடுத்தவர்களுடன் உங்களை ஒப்பீடு செய்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 2,8

துலாம்

Today-rasi-palan

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று – பணியிடங்களில் உங்கள் திறமை வெளிப்படும். விலை உயர்ந்த ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். மனைவிவழியில் எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 3,6

Also Read : சித்தப்பாவை கடத்தி 10 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய இளைஞர் கைது !!

விருச்சிகம்

Today-rasi-palan

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று – குடும்பத்திலும் சமூகத்திலும் உங்கள் மதிப்பு உயரும். சமூகத்தில் பிரபலமாக உள்ளவர்களின் நட்பு கிடைக்கும். ஆலய திருப்பணிகள் மற்றும் ஊர் பொது காரியங்களில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 5,9

தனுசு

Today-rasi-palan

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று – பிள்ளைகளின் தனித்திறமையை கண்டறிந்து உற்சாகப்படுத்துவீர்கள். நீண்ட நாள் வேண்டுதல்கள் நிறைவேறும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். பெற்றோர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 1,5

மகரம்

Today-rasi-palan

மகர ராசிக்காரர்களுக்கு இன்று – குடும்பத்தின் அடிப்படை தேவைகளை அறிந்து அதை பூர்த்தி செய்வீர்கள். தாய்வழி உறவினர்களுடன் சில மனஸ்தாபங்கள் வந்து விலகும். அடுத்தவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 1,9

கும்பம்

Today-rasi-palan

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று – தீர்க்கமான சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். வாகன வசதிகள் பெருகும். சொத்து தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 4,6

மீனம்

Today-rasi-palan

மீன ராசிக்காரர்களுக்கு இன்று – புதிய நட்பு வட்டம் உருவாகும். நீண்ட நாட்கள் இழுபறியாக இருந்து வந்த பிரச்சனைகளுக்கு முடிவு கட்டுவீர்கள். கணவன் மனைவியிடையே இருந்துவந்த பிரச்சனைகள் விலகும். ஆடம்பர பொருட்களை வாங்க திட்டமிடுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 7

Also Read : சீனாவின் சதி – அமெரிக்காவிடம் சிக்கிய ரகசிய ஆவணங்கள் – உலக நாடுகள் அதிர்ச்சி !!


Star Tamil News  |  Today Rasi Palan

Leave a Reply

%d bloggers like this: