Today Rasi Palan – இன்றைய ராசி பலன்  10/05/2021

Today Rasi Palan

இன்றைய ராசி பலன்

10/05/2021


மேஷம்

Today-rasi-palan

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று- குடும்ப பிரச்சனைகளை வெளி நபர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். அடுத்தவர்களின் தவறுகளை சுட்டி காட்டுவதன் மூலம் பிரச்சனைகளில் சிக்குவீர்கள். வீண் விவாதங்களை தவிர்ப்பது நன்மையை உண்டாக்கும்.

அதிர்ஷ்ட எண்கள் :- 5,7

ரிஷபம்

Today-rasi-palan

ரிஷப ராசிகாரர்களுக்கு இன்று – எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். பண உதவி கேட்டு நண்பர்கள் உறவினர்கள் தொந்தரவு தருவார்கள். ஆன்மீக விஷயத்தில் நாட்டம் செல்லும். வெளிநாட்டு வேலையை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 7,9

மிதுனம்

Today-rasi-palan

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று – புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். எதிர்பாராத விருந்தினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 3

Also Read : ரூ.100 கோடி மதிப்புள்ள ஹெராயின் & 251 கிராம் தங்கம் சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டது !!

கடகம்

Today-rasi-palan

கடக ராசிக்காரர்களுக்கு இன்று- நம்பிக்கை விடாமுயற்சியுடன் செயல்பட்டு காரியங்களை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 3,9

சிம்மம்

Today-rasi-palan

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று – பழைய நினைவுகளை எண்ணி மகிழ்வீர்கள். பிள்ளைகள் நினைவாற்றல் பெருகும். பிள்ளைகளின் திருமணப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் உண்டாகும் .

அதிஷ்ட எண்கள்:- 3,6

கன்னி

Today-rasi-palan

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று – வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து பேசி சிலரிடம் சிக்கிக் கொள்ள நேரிடலாம். கணவன் மனைவி இடையே மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். அதிக பணி சுமைகள் இருந்தாலும் கோபத்தை குறைத்துக் கொள்வது நன்மை.

அதிர்ஷ்ட எண்கள்:- 1,5

துலாம்

Today-rasi-palan

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று – தன்னம்பிக்கை அதிகரிக்கும் . சத்தமில்லாமல் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். திடீர் வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 2,4

Also Read : மீனவர்கள் வலையில் சிக்கிய ராக்கெட் லாஞ்சர் !!

 

விருச்சிகம்

Today-rasi-palan

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று – உங்கள் நம்பிக்கைக்கு பாத்திரமான நபர்களின் ஆதரவு தக்க சமயத்தில் கைகொடுக்கும் . உறவினர்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பயணங்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 4,6

தனுசு

Today-rasi-palan

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று – தடாலடியாக செயல்பட்டு சில காரியங்களை வேகமாக செய்து முடிப்பீர்கள். பணவரவு பொருள் வரவு சிறப்பாக இருக்கும். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 9

மகரம்

Today-rasi-palan

மகர ராசிக்காரர்களுக்கு இன்று – கணவன் மனைவியிடையே இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வீர்கள். இழுபறியாக இருந்துவந்த சொத்துப் பிரச்சினைகள் உங்களுக்கு சாதகமாக முடியும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 6

கும்பம்

Today-rasi-palan

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று – உடன் பிறந்தவர்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். புதியவர்களின் நட்பு கிடைக்கும். செலவுகளை கட்டுப்படுத்தி எதிர்காலத் தேவைக்காக சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 1,3

மீனம்

Today-rasi-palan

மீன ராசிக்காரர்களுக்கு இன்று – குடும்பத்தினரின் தேவைகளை அறிந்து அதை நிறைவேற்றி கொடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்கள் உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 2,8

Also Read : ரூ.100 கோடி மதிப்புள்ள ஹெராயின் & 251 கிராம் தங்கம் சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டது !!


Star Tamil News  |  Today Rasi Palan

Leave a Reply

%d bloggers like this: