Today Rasi Palan – இன்றைய ராசி பலன்  07/05/2021

Today Rasi Palan

இன்றைய ராசி பலன்

07/05/2021


மேஷம்

Today-rasi-palan

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று- நீண்ட இழுபறிக்குப் பின்பே காரியங்கள் நிறைவேறும். அலைச்சல் அதிகரிக்கும். முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட கூடும்.

அதிர்ஷ்ட எண்கள் :- 5

ரிஷபம்

Today-rasi-palan

ரிஷப ராசிகாரர்களுக்கு இன்று – உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை ஏற்படும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தாய்வழி உறவினர்களுடன் இணக்கமான நிலை காணப்படும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 2,8

மிதுனம்

Today-rasi-palan

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று – மறைமுக எதிர்ப்புகளை சாமர்த்தியமாக சமாளித்து உங்கள் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். அதிகாரிகளின் ஆலோசனைப்படி சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வீர்கள். பணவரவு சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 7

கடகம்

Today-rasi-palan

கடக ராசிக்காரர்களுக்கு இன்று- நீண்டநாள் இழுபறியாக இருந்த காரியங்கள் இன்று நிறைவேறும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் உள்ளவர்கள் ஆதரவு கிட்டும். கணவன் மனைவியிடையே இருந்துவந்த பிரச்சினைகள் நீங்கி அன்பு அதிகரிக்கும். திடீர் வெளியூர் பயணங்கள் ஏற்படக்கூடும்

அதிர்ஷ்ட எண்கள்:- 1,7

Also Read : முன்னாள் இந்திய பிரதமரின் மகன் கொரோனாவுக்கு பலி

சிம்மம்

Today-rasi-palan

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று – வீண் அலைச்சல் மற்றும் பணப்பற்றாக்குறை ஏற்படக்கூடும். அரசாங்கம் தொடர்பான காரியங்களை கவனமாக கையாள வேண்டும். எதிர்பாராத மருத்துவ செலவுகள் வீண் பழிகள் வரக்கூடும்.

அதிஷ்ட எண்கள்:- 2

கன்னி

Today-rasi-palan

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று – பணவரவுகள் சிறப்பாக இருக்கும். பழைய நண்பர்களால் திடீர் திருப்பங்கள் ஏற்படக்கூடும். ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 9

துலாம்

Today-rasi-palan

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று – உடன்பிறந்தவர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 3,9

விருச்சிகம்

Today-rasi-palan

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று – நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த உதவிகள் கிடைக்கும். குழப்பங்கள் நீங்கும். விவிஐபி களுடன் நெருக்கமாவீர்கள். பணவரவு மிக சிறப்பாக இருக்கும். கலை பொருட்கள் செய்யும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 1

தனுசு

Today-rasi-palan

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று – அரசாங்கம் தொடர்பான காரியங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நண்பர்களால் சில காரியங்கள் நிறைவேறும். உறவினர்களுடன் அளவுடன் பழகுவது நன்மை. பண வரவு சீராக இருக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 5,9

மகரம்

Today-rasi-palan

மகர ராசிக்காரர்களுக்கு இன்று – ஆன்மீக பயணம் செல்ல திட்டமிடுவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த பணம் கைக்கு வரும். சகோதரர்கள் வழியில் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 1

கும்பம்

Today-rasi-palan

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று – உங்களுக்குப் புதிய நட்பு வட்டம் உருவாகும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றி பெறும். தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். இழுபறியாக இருந்து வந்த கடன் தொகை வசூலாகும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 6

மீனம்

Today-rasi-palan

மீன ராசிக்காரர்களுக்கு இன்று – எந்த காரியங்களையும் திட்டமிட்டு செய்வது நல்லது. குடும்பத்தினருடன் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். அடுத்தவர்களின் மனம் புண்படும் வகையில் பேசாதீர்கள். பெற்றோர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 3,5

Also Read : முன்னாள் இந்திய பிரதமரின் மகன் கொரோனாவுக்கு பலி

Star Tamil News  |  Today Rasi Palan

Leave a Reply

%d bloggers like this: