Today Rasi Palan – இன்றைய ராசி பலன்  06/05/2021

Today Rasi Palan

இன்றைய ராசி பலன்

06/05/2021


மேஷம்

Today-rasi-palan

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று- நீண்ட நாள் தடைபட்டிருந்த திருமண முயற்சிகள் கைகூடும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். வீட்டை விரிவுபடுத்தி கட்ட திட்டமிடுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள் :- 3,5

 

Also Readபாஜக பிரமுகரிடம் 7.5 கோடி ரூபாய் மோசடி – ஹரிநாடார் கைது

ரிஷபம்

Today-rasi-palan

ரிஷப ராசிகாரர்களுக்கு இன்று – உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படும். வீட்டில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 4

மிதுனம்

Today-rasi-palan

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று – பிள்ளைகளின் தேவை அறிந்து அதை நிறைவேற்றுவீர்கள். கடந்த கால இனிய சம்பவங்களை நினைத்து மகிழ்வீர்கள். சமூகத்தில் பிரபலமானவரின் அறிமுகம் கிடைக்கும். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 9

கடகம்

Today-rasi-palan

கடக ராசிக்காரர்களுக்கு இன்று- வீண் செலவுகள் ஏற்படும். பயணங்கள் தடைபட்டாலும் அதை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நன்மை உண்டாகும். பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நல்லது.

அதிர்ஷ்ட எண்கள்:- 5,7

சிம்மம்

Today-rasi-palan

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று – உறவினர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு உயரும். கணவன் மனைவியிடையே ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். தக்க சமயத்தில் எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.

அதிஷ்ட எண்கள்:- 1,9

Also Readபாஜக பிரமுகரிடம் 7.5 கோடி ரூபாய் மோசடி – ஹரிநாடார் கைது

கன்னி

Today-rasi-palan

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று – பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். உதவி கேட்டு வருபவர்களுக்கு உங்களால் முடிந்ததை செய்து கொடுப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 4

துலாம்

Today-rasi-palan

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று – பிள்ளைகளின் வருங்காலத்தை எண்ணி நீங்கள் திட்டமிட்டிருந்த காரியம் நிறைவேறும். ஆன்மீக விஷயத்தில் மனம் நாட்டம் செல்லும். பழைய நண்பர்கள் உதவியுடன் சில காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 2,4

விருச்சிகம்

Today-rasi-palan

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று – தடைகளைத் தாண்டி முன்னேற்றம் அடைவீர்கள். வீடு வாகனங்கள் தொடர்பான பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். திடீர் வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்பட்டாலும் ஆதாயம் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 1,3

தனுசு

Today-rasi-palan

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று – மற்றவர்களுக்காக செலவு செய்து பெருமைப்படுவீர்கள். உறவினர்கள் நண்பர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். இழுபறியாக இருந்து வந்த பூர்வீக சொத்து பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 6,9

மகரம்

Today-rasi-palan

மகர ராசிக்காரர்களுக்கு இன்று – கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். தன்னம்பிக்கை மற்றும் சுறுசுறுப்புடன் செயல்பட்டு கிடப்பில் கிடந்த வேலைகளை செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளுக்கு அறிவுரை கூறி நல்வழிப்படுத்துவீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 1

கும்பம்

Today-rasi-palan

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று – எளிதாக முடிக்க வேண்டிய சில காரியங்களை கூட போராடி முடிக்க வேண்டியதாய் இருக்கும். முன்கோபத்தை குறைப்பது நன்மையை உண்டாக்கும். குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் அன்புத் தொல்லை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 2,8

மீனம்

Today-rasi-palan

மீன ராசிக்காரர்களுக்கு இன்று – முக்கியமான கோப்புகளை கையாளும் போது அலட்சியம் காட்டாதீர்கள். வாகனத்தில் செல்லும் போது அதீத கவனம் தேவை. வெளியிடங்களில் உணவு உண்பதை தவிர்ப்பது நன்மை. உடல் நலத்தில் அதிக கவனம் தேவை.

அதிர்ஷ்ட எண்கள்:- 4,7

 

Also Readபாஜக பிரமுகரிடம் 7.5 கோடி ரூபாய் மோசடி – ஹரிநாடார் கைது

Star Tamil News  |  Today Rasi Palan

Leave a Reply

%d bloggers like this: