Today Rasi Palan – இன்றைய ராசி பலன்  02/05/2021

Today Rasi Palan

இன்றைய ராசி பலன்

02/05/2021


 

மேஷம்

Today-rasi-palan

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று- நவீன மின் சாதனங்கள் வாங்குவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். எதிர்பார்த்த பணவரவு வரும். நண்பர்களால் சில காரியங்கள் நிறைவேறும்.

அதிர்ஷ்ட எண்கள் :- 5,9

ரிஷபம்

Today-rasi-palan

ரிஷப ராசிகாரர்களுக்கு இன்று – குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை குறைகளை எடுத்துக்கூறினால் கோபப்படாதீர்கள். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 7

மிதுனம்

Today-rasi-palan

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று – உடன்பிறந்தவர்கள் வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணம் பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும். வாகனத்தை சீர் செய்வீர்கள். மனைவிவழி உறவினர்களால் திடீர் செலவுகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 2,4

கடகம்

Today-rasi-palan

 

கடக ராசிக்காரர்களுக்கு இன்று- சாதுர்யமாக பேசி எல்லோரையும் கவர்வீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக விலகியிருந்த உறவினர்கள் நண்பர்களை சந்திப்பீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 5

சிம்மம்

Today-rasi-palan

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று – ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். அண்டை வீட்டாரின் அன்புத் தொல்லைகள் விலகும்.

அதிஷ்ட எண்கள்:- 6

கன்னி

Today-rasi-palan

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று – எதிர்பார்த்திருந்த சில காரியங்கள் தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு காரியம் நிறைவேறும். பெற்றோரின் உடல் நலத்தில் கூடுதல் கவனம் தேவை. கடன்களை தீர்க்க உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 1

துலாம்

Today-rasi-palan

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று – நீண்ட கால பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வெளிவட்டாரத்தில் உங்கள் மதிப்பு உயரும். விருந்தினர்களின் வருகை உண்டு.

அதிர்ஷ்ட எண்கள்:- 2,6

விருச்சிகம்

Today-rasi-palan

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று – கடனை திருப்பி செலுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 1,7

தனுசு

Today-rasi-palan

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று – சிலரின் விமர்சனங்களுக்கும் கேலி பேச்சிற்கும் ஆளாவீர்கள். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளுங்கள். வாகனம் செலவு வைக்கக் கூடும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 3,5

மகரம்

Today-rasi-palan

மகர ராசிக்காரர்களுக்கு இன்று – சில காரியங்களை அலைந்து திரிந்து நீண்ட இழுபறிக்கு மத்தியில் நிறைவேற்ற வேண்டியது இருக்கும். பிள்ளைகள் வழியில் சில சங்கடங்கள் உண்டாகும். வாகனங்களில் செல்லும் போது மிக கவனமுடன் இருப்பது நன்மையை உண்டாகும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 4,8

கும்பம்

Today-rasi-palan

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று – எதையும் தாங்கும் மனவலிமை கிடைக்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். விஐபிகள் அறிமுகமாவார்கள். வீடு பராமரிப்பு பணிகளை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 7,9

மீனம்

Today-rasi-palan

மீன ராசிக்காரர்களுக்கு இன்று – தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர்கள் நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். நம்பிக்கையானவர்களுடன் கலந்தாலோசித்து சில நல்ல முடிவுகளை எடுப்பீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 1,5


Star Tamil News  |   Today Rasi Palan

Leave a Reply

%d bloggers like this: