Today Rasi Palan – இன்றைய ராசி பலன் [ 01/05/2021 ]

 Today Rasi Palan

இன்றைய ராசி பலன்

[ 01/05/2021 ]

 


மேஷம்

Today-rasi-palan

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று- இழுபறியாக இருந்து வந்த காரியங்கள் எல்லாம் சுமூகமாக முடியும். சொந்த பந்தங்களுக்கு மத்தியில் உங்கள் மதிப்பு உயரும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண்கள் :- 5,9

ரிஷபம்

Today-rasi-palan

ரிஷப ராசிகாரர்களுக்கு இன்று – சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் உத்திரவாதமும் தர வேண்டாம். வெளி உணவுகளை தவிர்ப்பது நன்மையை உண்டாகும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 2

மிதுனம்

Today-rasi-palan

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று – மனநிறைவுடன் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 3,5

கடகம்

Today-rasi-palan

கடக ராசிக்காரர்களுக்கு இன்று- குடும்பத்தில் அமைதி நிலவும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். கடன் பிரச்சனைகள் தீர மாற்று வழிகள் காண்பீர்கள். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 6

சிம்மம்

Today-rasi-palan

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று – பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள். அரசியல்வாதிகளின் சந்திப்பு நிகழும். கலைப்பொருட்கள் சேரும்.

அதிஷ்ட எண்கள்:- 4,8

கன்னி

Today-rasi-palan

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று – தன்னம்பிக்கை பிறக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். கணவன் மனைவி இடையே நிலவிய பனிப்போர் முடிவுக்கு வரும். பணப்பற்றாக்குறை நீங்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 5,7

துலாம்

Today-rasi-palan

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று – மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். தாய்வழி உறவினர்களால் சில காரியங்கள் நிறைவேறும். திடீர் பயணங்கள் ஏற்படக்கூடும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 2,6

விருச்சிகம்

Today-rasi-palan

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று – சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். மனதுக்கு பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 3,9

தனுசு

Today-rasi-palan

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று – பழைய இனிய நினைவுகளில் அடிக்கடி மூழ்குவீர்கள். சிலர் நன்றி மறந்து பேசுவார்கள். வெளிவட்டாரத்தில் பெரிய பொறுப்புகளை உங்களை நம்பி ஒப்படைப்பார்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 2,4

மகரம்

Today-rasi-palan

மகர ராசிக்காரர்களுக்கு இன்று – குடும்பத்தில் கலகலப்பான சூழல் காணப்படும். உடல்நிலை சீராக இருக்கும். உறவினர்களின் வருகையுண்டு. கனவு தொல்லை தூக்கமின்மை விலகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 1,5

கும்பம்

Today-rasi-palan

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று – திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக வளர்க்க வேண்டும் என எண்ணுவீர்கள். புது தெம்பு பிறக்கும். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 1,9

மீனம்

Today-rasi-palan

மீன ராசிக்காரர்களுக்கு இன்று – வீண் செலவுகளை தவிர்ப்பீர்கள். பேச்சில் தன்னம்பிக்கை பிறக்கும். குடும்ப வருமானத்தை உயர்த்த ஆலோசனை செய்வீர்கள். ஆன்மீக பயணம் செல்ல திட்டமிடுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 6,8


Star Tamil News  |    Today Rasi Palan

Leave a Reply

%d bloggers like this: