[ Weather Update ] தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் !! -01

[ Weather Update ]

தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம்


தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த செய்தி அக்னி நட்சத்திர வெயிலில் வாடிக்கொண்டிருந்த மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா முதல் கர்நாடகா மாநிலம் வரை சுமார் ஒரு கிலோமீட்டர் உயரம் அளவிற்கு மேலடுக்கு சுழற்றி நிலவுவதாலும் வெப்பச்சலனம் காரணமாகவும் இன்றைய தினமும் நாளையும் வட தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கன்னியாகுமரி திருநெல்வேலி தேனி தென்காசி நீலகிரி போன்ற மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பும் தொடங்கிய பின்னும் அவ்வப்போது பெய்து வரும் மழையால் கோடை வெயிலின் தாக்கம் சற்று தணிந்துள்ளது.

Weather-update

Weather Update
Also Read : நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் – முதல்வர் ஸ்டாலின் !! 

முன்னதாக தென்காசி அருகேயுள்ள மேலகரம் இலஞ்சி செங்கோட்டை குற்றாலம் ஆகிய பகுதிகளில் நேற்றைய தினம் பரவலாக மழை பெய்தது. தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக குற்றால அருவிகளில் நீர் விழ தொடங்கியுள்ளது. எனினும் கொரோனா நோய் பரவல் காரணமாக குற்றாலம் அருவிகளில் குளிக்க மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக ராஜபாளையம் அய்யனார் கோவில் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக முடங்கியாற்றில் நீர் நிறைந்து செல்கிறது. மேலும் பல இடங்களில் தற்காலிக நீர்வீழ்ச்சிகள் உருவாகி உள்ளது. மதுரை, தேனி, விருதுநகர் போன்ற தென் மாவட்டங்கள் உட்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் நாளையும் மிதமான மழையும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யகூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Also Read : நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் – முதல்வர் ஸ்டாலின் !! 

 


Star Tamil News   | Weather Update

Leave a Reply

%d bloggers like this: