[ Tn Night Curfew ] தமிழகம் முழுவதும் இன்று முதல் இரவு ஊரடங்கு அமலுக்கு வருகிறது !! -01

[ Tn Night Curfew ]

தமிழகம் முழுவதும் இன்று முதல் இரவு ஊரடங்கு அமலுக்கு வருகிறது


Covid-19 நோய் நோய்த்தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவில் தீவிரமடைந்துள்ளது நேற்று ஒரே நாளில் சுமார் 250000 ஆயிரம் புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் கொரோனா நோய் பரவலை தடுக்கும் நோக்குடன் பல கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது.

இதை தொடர்ந்து தமிழகத்தில் நேற்றைய தினம் 10,500 பேர் புதிதாக நோய் தொற்றால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகரித்துவரும் கொரோனா பரவலை தடுப்பது குறித்து கடந்த 18ஆம் தேதி தமிழக முதல்வர் அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் சுகாதார துறையினருடன் ஆலோசனை மேற்கொண்டிருந்தார். இந்த ஆலோசனையின் முடிவில் தமிழகத்தில் 20ம் தேதி (இன்று) முதல் பல கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவிட்டபட்டுள்ளது.

தமிழக அரசின் அறிவிப்பின்படி இன்று இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இந்த ஊரடங்கு மறு உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரவு நேர ஊரடங்கின் போது பொது போக்குவரத்து மற்றும் ஆட்டோ டாக்ஸிகளுக்கு அனுமதி இல்லை. மேலும் எரிபொருள் நிலையங்கள் வழக்கம்போல் செயல்படும் எனவும் அவசர மருத்துவ தேவைகளுக்கு மட்டும் ஆட்டோ, டாக்சி போன்ற சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்து மற்ற நகரங்களுக்கு செல்லும் பேருந்துகள் இரவு 10 மணிக்குள் குறிப்பிட்ட இடங்களை சென்று சேரும் வகையில் அரசு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tn-night-curfew

அரசின் Covid-19 வழிகாட்டு விதிமுறையை பொதுமக்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் எனவும் நோய் தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் பணியாளர்கள் மற்றும் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டுமெனவும் அரசுத் தரப்பில் இருந்து பொதுமக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .


Star Tamil News      |     Tn Night Curfew 

Leave a Reply

%d bloggers like this: