[ Lockdown ] வார இறுதி நாட்களில் ஊரடங்கு விதிப்பது தொடர்பாக தமிழக அரசு இன்று ஆலோசனை !! -01

[ Lockdown ]

வார இறுதி நாட்களில் ஊரடங்கு விதிப்பது தொடர்பாக தமிழக அரசு இன்று ஆலோசனை


தமிழகத்தில் covid-19 நோய் தொற்று பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வருவதை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு பல கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் மேலும் சில கட்டுப்பாடுகளை விதிப்பது பற்றி தமிழக அரசின் தலைமை செயலாளர் தலைமையில் இன்று ஆலோசனைக்கூட்டம் நடைபெறவுள்ளது.

மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா உட்பட பல மாநிலங்களில் கொரோனா நோய் தொற்று பரவல் அதிகமாக உள்ளது எனவே அம்மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு போன்ற பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றது.

தமிழகத்தில் நேற்றைய தினம் சுமார் 7500 பேர் புதிதாக நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 2500 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து நேற்றைய தினம் தமிழக அரசின் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அளித்த விளக்கத்தில் தமிழகத்தில் நோய் பரவல் நாள் ஒன்றுக்கு 10 சதவிகிதம் என அதிகரித்து வருவதாகவும். கொரோனா பரவல் கைமீறி சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் தடுப்பூசி போடும் பணிகள் துரிதப்படுத்த பட்டுள்ளது எனவும் திருமணம், இறுதி சடங்கு, பொதுக்கூட்டங்கள் போன்றவற்றுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக. அரசின் வழிகாட்டு விதிமுறைகளை மீறும் நபர்களை கண்காணித்து அபராதம் விதிக்கப்பட்டு வருவதாகவும் தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Lockdown-ஊரடங்கு

இந்நிலையில் தமிழகத்தில் நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில் இரவு ஊரடங்கு, வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் இன்று காலை தலைமை செயலகத்தில் நடைபெறவுள்ளது. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர்.


Star Tamil News        |       Lockdown – லாக்டவுன்

Leave a Reply

%d bloggers like this: