[ Tn Election ] திட்டமிட்டபடி வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடைபெறும்- தேர்தல் ஆணையம் !!

[ Tn Election ]

திட்டமிட்டபடி வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடைபெறும்- தேர்தல் ஆணையம்


தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவலின் 2ம் அலை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 18ஆம் தேதி அரசின் உயரதிகாரிகள் மற்றும் சுகாதாரத் துறையினருடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை முடிவில் 20ம் தேதி முதல் தமிழகத்தில் பல கட்டுப்பாடுகள் விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த உத்தரவின்படி நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது. அரசின் மறு உத்தரவு வரும் வரையில் இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் வாக்கு எண்ணிக்கை நடைபெறுமா அல்லது வாக்கு எண்ணிக்கை ஒத்திவைக்கப்படுமா என அரசியல் கட்சிகள் மத்தியில் கேள்விகள் எழுந்தன.

Tn-Election

 

இதைத்தொடர்ந்து தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு வெளியிட்ட அறிவிப்பில் கொரோனா வழிகாட்டு விதிகளை பின்பற்றி மே 2ம் தேதி திட்டமிட்டபடி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தெரிவித்தார். மேலும் தமிழக தலைமைச்செயலாளர், அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன்   தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார்.

முன்னதாக இன்று காலை வாக்கு எண்ணிக்கையின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் சத்யபிரதா சாஹூ ஆலோசனை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Star Tamil News     |    Tn Election

Leave a Reply

%d bloggers like this: