G-Pay போன்ற செயலிகளுக்கு தடைவிதிக்க கோரிக்கை !! -04

G-Pay போன்ற செயலிகளுக்கு தடைவிதிக்க கோரிக்கை !!


தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது இந்நிலையில் வாக்காளர்களுக்கு G-pay, phone pay, paytm போன்ற செயலிகளின் மூலம்  பணம் விநியோகிக்க இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக ராமசுப்பிரமணியம் என்கிற வழக்கறிஞர் தேர்தல் ஆணையத்திடம் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அந்த மனுவில் அமைச்சர்கள் சிலர் மக்களுக்கு g pay, phonepe, paytm மூலம் பணம் வினியோகம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அதனால் தேர்தல் நியாயமான முறையில் நடைபெறுமா என சந்தேகம் எழுந்துள்ளது எனவும் அதை தடுக்க இந்த செயலிகள் மூலம் நடைபெறும் பண பரிவர்த்தனைகளுக்கு தேர்தல் முடியும் வரை தடைவிதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

G-pay

மேலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் இந்த புதிய முறையை தடுக்க தேர்தல் ஆணையம் தவறும்பட்சத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுக வேண்டியது இருக்கும் என வழக்கறிஞர் ராமசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.


Star Tamil News                          

Leave a Reply

%d bloggers like this: