[ covid-19] கொரோனா நோய் தொற்றின் 2வது அலை கைமீறி சென்றுவிட்டது – தமிழக அரசு !!

[ covid-19]

கொரோனா நோய் தொற்றின் 2வது அலை கைமீறி சென்றுவிட்டது – தமிழக அரசு


தமிழகத்தில் covid-19 நோய் தொற்று பரவல் அரசின் கைமீறி சென்றுவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இன்று பிற்பகல் சுகாதாரத்துறை செயலாளர் தலைமை நீதிபதியை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க உள்ளார்.

இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரிடம் கொரோனா நோய்த்தொற்று விஷயத்தில் நீதிமன்றங்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை குறித்த ஆலோசனைகள் எதுவும் உள்ளதா எனவும் கொரோனா நோய் தொற்று இரண்டாவது அலை கடந்த ஆண்டைவிட மோசமாக பரவி வருவது பற்றி விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி கோரினார்.

இதற்குப் பதிலளித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் அரசிடம் போதிய அளவு தடுப்பூசிகள் உள்ளது எனவும் இருந்தபோதிலும் கொரோனா நோய் தொற்று பரவல் அரசின் கட்டுப்பாட்டை மீறி சென்று விட்டதாகவும் இது குறித்து தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம் அளித்தால் தான் சரியாக இருக்கும் எனவும் அவரை நீதிமன்றம் வர சொல்வதாகவும் தெரிவித்தார்.

 

Covid-19-தமிழக-அரசு
தலைமை வழக்கறிஞரின் கருத்துக்களை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி இன்று பிற்பகலில் சுகாதாரத்துறை செயலாளர் சந்திப்பதாக தெரிவித்தார். இதைதொடர்ந்து இன்று பிற்பகல் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை நீதிபதியை சந்தித்து விளக்கம் அளிக்க உள்ளார்.


Star Tamil News         |               Covid-19 

Leave a Reply

%d bloggers like this: