[ EPS ] ஸ்டாலினிடம் விஷயமே இல்லை !! முதல்வர் பழனிசாமி விமர்சனம்-01

[ EPS ] ஸ்டாலினிடம் விஷயமே இல்லை !! முதல்வர் பழனிசாமி விமர்சனம்-01


தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி  தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர் அந்தவகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தொகுதியில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்தின் போது எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினை குறிப்பிட்டுப் பேசிய முதல்வர். ஸ்டாலினிடம் விஷயமே இல்லை என்னைப் பற்றி அவதூறு பரப்புவது மட்டுமே ஒரே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார்.

Eps

புதிய விவசாய சட்டங்கள்  குறித்துப் பேசும் ஸ்டாலினுக்கு ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன் விவசாய சட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது அந்த சட்டத்தால் தமிழக மக்களுக்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதை முதலில் எதிர்க்கும் கட்சி அதிமுகவாக தான் இருக்கும் விவசாயிகள் அதிக லாபம் பெறும் நோக்குடனே விவசாய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது

டெல்லியில் சில இடைத்தரகர்களின் தூண்டுதலின் பேரிலேயே விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் ஸ்டாலினுக்கு விவசாயத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாது ஆனால் அதிமுக அரசின் நோக்கம் விவசாயிகள் விவசாய பொருட்களின் விலைகள் வீழ்ச்சி அடையும் போது பாதிக்கப்படக் கூடாது என்பது மட்டுமே என குறிப்பிட்டார்.


Star Tamil News                                       EPS

Leave a Reply

%d bloggers like this: