[ Election Manifesto ] மாணவர்களுக்கு கிரெடிட் கார்டு மம்தாவின் தேர்தல் அறிக்கை !!- 01

[ Election Manifesto ]

மாணவர்களுக்கு கிரெடிட் கார்டு மம்தா தேர்தல் அறிக்கை

Star Tamil news

மேற்கு வங்க சட்டசபை தேர்தல் வரும் மார்ச் 27ஆம் தேதி தொடங்கி எட்டு கட்டங்களாக நடைபெற உள்ளது இதையொட்டி கட்சிகளின் அனல் பறக்கும் பிரச்சாரத்திற்கு இடையே ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டார்.

Election-manifesto

தேர்தல் அறிக்கை விபரம்.

விவசாயம்

68 லட்சம் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 10 ஆயிரம் ரூபாய்  மானியம் வழங்கப்படும்.

குடிநீர் , மின்சாரம் மற்றும் சாலை வசதி

47 லட்சம் குடும்பங்களுக்கு புதிய குடிநீர் இணைப்பு, குறைவான கட்டணத்தில் 24 மணி நேரம் தடையில்லா மின்சாரம். அனைத்து பருவ நிலைக்கும் ஏற்ற சாலைகள் ஏற்படுத்தபடும் .

வீட்டுவசதி துறை

ஏழை எளிய மக்களுக்கு கிராமபுறங்களில் 5 லட்சம் வீடுகளும் நகர்புறங்களில் 25 லட்சம் வீடுகளும் பங்களா ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் கட்டித் தரப்படும்.

சுகாதாரம்

23  மாவட்ட தலைநகரங்களில் புதிய மருத்துவ கல்லூரி மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைக்கப்படும்

தொழில்துறை

தொழில்துறையில் அடுத்த 5 ஆண்டுகளில் 5 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை மேற்கொள்ளபடும்

அனைவருக்கும் உணவு திட்டம்

அனைவருக்கும் உணவு திட்டம் மூலம் 1.5 கோடி குடும்பங்களுக்கு ரேஷன் பொருட்களை நேரடியாக வீடுகளுக்கு வினியோகிக்கும் திட்டம்.

மாணவர்களுக்கு கிரிடிட் கார்டு

மேற்கு வங்கத்தை சேர்ந்த மாணவர்களுக்கு ரூபாய் 10 லட்சம் வரை வரம்புள்ள கிரெடிட் கார்டு 4% வட்டியில் வழங்கப்படும்.

குடும்பப் தலைவிகளுக்கு ஊக்க தொகை

பொதுப் பிரிவைச் சேர்ந்த குடும்பப் தலைவிகளுக்கு மாதம் 500 ரூபாயும் மற்ற  பிரிவின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாயும் வழங்கப்படும்.

 

தேர்தல் அறிக்கை குறித்த  பேசிய மம்தா பானர்ஜி இது மக்களுக்கான அறிக்கைகள் அரசியல் அறிக்கை  அல்ல வளர்ச்சிக்கான அறிக்கை என  தெரிவித்தார்.


Election Manifesto                Star Tamil News

Leave a Reply

%d bloggers like this: