[ The Gray Man ] தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது !!-01

[ The Gray Man ] தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமாகி பலரின் ஏளன பேச்சுகளை தாண்டி தனது நடிப்பு திறமையால்  தமிழ் திரையுலகில் தனகென தனி முத்திரை பதித்த தனுஷ் ஹாலிவுட்டில் தனது இரண்டாவது படத்தில் நடிக்க உள்ளார். ரூஸோ பிரதர்ஸ் இயக்கும்  திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

The Extraordinary journey of fakir படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாகிய தனுஷ் தற்போது Avengers Infinity War , Avengers Endgame, Civil War போன்ற  பிரமாண்ட வெற்றி படங்களை இயக்கிய ரூஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் The Gray Man என்னும் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

The-Gray-man

இப்படத்தில் தனுசுடன் பிரபல ஹாலிவுட் நடிகர்கள் கிறிஸ் ஈவான்ஸ் மற்றும் ரயன் காஸ்லிங் போன்றோர் நடிக்க உள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியுள்ளதாக படக்குழு ட்விட்டர் மூலம் செய்தி வெளியிட்டுள்ளது படப்பிடிப்பில் கலந்து கொள்ள சில தினங்களுக்கு முன்பு நடிகர் தனுஷ் அமெரிக்கா சென்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Star Tamil News.                      Actor Dhanush

Leave a Reply

%d bloggers like this: