[ Thailand ] முக கவசம் அணியாத தாய்லாந்து பிரதமருக்கு அபராதம் !! -01

[ Thailand ]

முக கவசம் அணியாத தாய்லாந்து பிரதமருக்கு அபராதம்


உலகின் பல நாடுகளில் covid-19 நோய் தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் கடந்த சில வாரங்களாக தாய்லாந்து நாட்டில் நோய் தொற்று வேகம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

கொரோனா வைரசின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த தாய்லாந்து அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் கடந்த ஒரு வார காலமாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது.

இதையடுத்து நாடு முழுவதும் மக்கள் முக கவசம் அணிவது கட்டாயம் எனவும் முக கவசம் அணியாத நபர்களுக்கு (இந்திய மதிப்பில் 46 ஆயிரம் ரூபாய்) அபராதம் விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்தது.

இந்நிலையில் தலைநகர் பாங்காக்கில் கொரோனா நோய் தடுப்பு மற்றும் தடுப்பூசிகள் கொள்முதல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் அந்நாட்டு பிரதமர் பிரயுத் சான் முக கவசம் அணியாமல் கூட்டத்தில் கலந்து கொண்டது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.

Thailand-பிரதமர்

இதைத்தொடர்ந்து பாங்காக் நகர நிர்வாகம் பிரதமர் பிரயுத் சான்க்கு (இந்திய மதிப்பில் சுமார் 14 ஆயிரம் ரூபாய்) அபராதம் விதித்தது மேலும் இது தொடர்பாக பிரதமர் மீது காவல் துறையில் புகார் அளித்துள்ளதாக பாங்காக் கவர்னர் அஸ்வின் குவான்முவாங் தெரிவித்துள்ளார்.


Star Tamil News    |   Thailand

Leave a Reply

%d bloggers like this: