Tecno Spark 7 Pro – அசத்தலான அம்சங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் அறிமுகம் !!

Tecno Spark 7 Pro

அசத்தலான அம்சங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் அறிமுகம்


பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான டெக்னோ தனது புத்தம் புதிய Tecno Spark 7 proவை உலகளவில் அறிமுகப்படுத்தியுள்ளது. மூன்று வேரியண்ட்களை கொண்ட இந்த தொலைபேசி பல சிறந்த அம்சங்களையும் பிரீமியம் வடிவமைப்பு மற்றும் சிறந்த பேட்டரி ஆதரவு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இவை அனைத்தும் இதை  அட்டகாசமான Smartphone ஆக்குகின்றன. ஸ்மார்ட்போன் சந்தையை கலக்க களமிறங்கும் இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பற்றி கீழே காண்போம்.

Tecno-Spark-7-pro

Tecno Spark 7 Pro-வில் மூன்று வகைகள் வருகின்றன. 4 GB RAM + 64 GB Storage, 6 GB RAM + 64 GB Storage மற்றும் 4 GB RAM + 128 GB Storage இந்த 3 வகைகள் ஆகும். இந்த தொலைபேசி ஆல்ப்ஸ் ப்ளூ, மேக்னடிக் பிளாக், நியான் ட்ரீம் மற்றும் ஸ்ப்ரூஸ் கிரீன் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது. இதை கையில் பெறும் நேரத்திற்காக அனைவரும் காத்திருக்கிறார்கள்.

விவரக்குறிப்பு

Tecno Spark 7 Pro 6.6 இன்ச் HD+ Display கொண்டுள்ளது. இது 720×1,600 Pixel ரெசல்யூஷன் கொண்டது. பவரைப் பொறுத்தவரை 5,000 MAH பேட்டரி கொண்டுள்ளது. செயல்திறனைப் பொறுத்தவரை, இது மீடியாடெக் ஹீலியோ G 80 பிராசசரைக் கொண்டுள்ளது. இந்த தொலைபேசி Android 11 அடிப்படையிலான HiOS 7.5 இல் இயங்குகிறது.

Camera

Photo மற்றும் Videoவை பொறுத்தவரை, இந்த தொலைபேசியில் மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது. இது 48MP முதன்மை சென்சாரைக் கொண்டுள்ளது. மற்ற 2 லென்ஸ்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. இதில் முன் 8MP செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இணைப்பிற்காக, இந்த தொலைபேசியில் Wi-Fi, 4 G, Bluetooth, GSP மற்றும் USB போர்ட் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பிற்காக, அதன் பின் பேனலில் கைரேகை ஸ்கேனர் உள்ளது.

இந்த SmartPhone விசேஷ அம்சங்கள் காரணமாக ஸ்மார்ட்போன் பிரியர்கள் இதை விரும்பி வாங்குவார்கள் என தொழில்நுட்ப வல்லுனர்கள் கருதுகின்றனர்.


Star Tamil News   |     Techno Spark 7 Pro

Leave a Reply

%d bloggers like this: