[ Tasmac ] நாளை முதல் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை !!

[ Tasmac ] நாளை முதல் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை


தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி டாஸ்மாக் கடைகள் மற்றும் தனியார் பார்களில் மது விற்பனை செய்ய நாளை முதல் மூன்று நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 3 நாட்களுக்கு மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் மதுபான சேமிப்புக் கிடங்குகளில் இருந்து கடைகளுக்கு கொண்டு செல்லப்படும் மதுபானங்கள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

தடையை மீறி டாஸ்மாக் பார்களிலோ அல்லது தனியார் பார்களில் மதுபானங்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது மேலும் மதுபானங்களை வாங்கி பதுக்கும் நபர்களை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tasmac

அடுத்த 3 நாட்களுக்கு மது விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளதால் மது பிரியர்கள் முன்னெச்சரிக்கையாக இன்றே மது பாட்டில்களை வாங்கி ஸ்டாக் வைக்க தொடங்கியுள்ளனர் இதனால் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.


Star Tamil News               Tamilnadu Tasmac

Leave a Reply

%d bloggers like this: