[ Tamilnadu ] கொரோனா நோயாளிகளை மருத்துவமனைகளில் சந்திக்க தடை – தமிழக அரசு !! -01

[ Tamilnadu ]

கொரோனா நோயாளிகளை மருத்துவமனையில் சந்திக்க தடை – தமிழக அரசு


மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளை சந்திக்க வருபவர்கள் மற்றும் நோயாளிகளை உடன் இருந்து கவனித்து கொள்பவர்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது

இதுகுறித்து தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குனர், மருத்துவம் மற்றும் ஊரக சுகாதார சேவைகள் மையங்களின் இயக்குனர்களுக்கு பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து இயக்குநர் செல்வவிநாயகம் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது

கொரோனா நோய் தொற்றை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா நோய் பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது. அதற்காக அவ்வப்போது பல்வேறு உத்தரவுகளையும் தமிழக அரசு பிறப்பித்து வருகிறது.

Tamilnadu

Also Read : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு விபரங்கள் !!

இந்த சூழலில் தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 71 ( 1&2 டி) ஆகிய விதிகளை உங்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். அந்த சட்டத்தின்படி அடுத்தவர்களுக்கு தொற்று ஏற்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.

ஆகவே கொரோனா நோய் தொற்றுக்கு உள்ளாகி கொரோனா சிகிச்சைக்காக அறிவிக்கப்பட்ட மருத்துவமனைகள் (CDH), மருத்துவ நிறுவனங்கள், கொரோனா சுகாதார மையங்கள் (CHC) போன்றவற்றில் தனிமைப்படுத்தும் வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களை சந்திக்க வருவோர் மற்றும் நோயாளிகளை உடனிருந்து கவனிக்க வருவோரை இந்த சட்ட விதிகளில் கூறப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி தடை செய்ய வேண்டும்.

நோயாளிகளை உடன் இருந்து கவனிக்க (அட்டெண்டர்) அவசியமாகும் பட்சத்தில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ள கொரோனா நோய் பரவல் தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியமாகும். மேலும் நோயாளிகளின் நிலை குறித்த தகவல்களை அவர்களின் உறவினர்களுக்கு தெரிவிக்கும் வசதியையும் செய்து கொடுக்க வேண்டும்.

எனவே உங்கள் நிர்வாகத்திற்கு உட்பட மருத்துவ மையங்கள் மற்றும் நிறுவனங்களில் இந்த உத்தரவுகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை உறுதி செய்யுங்கள் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Also Read : கொரோனாவுக்கு பலியான மம்தா பானர்ஜியின் சகோதரர் !!


Star Tamil News   |   Tamilnadu 

Leave a Reply

%d bloggers like this: