ஏப்ரல்-6 தமிழக சட்டமன்ற தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்.

 

தமிழகம் உட்பட ஐந்து மாநில தேர்தல் தேதியை வெளியிட்டார் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா.

Election-commissioner

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்

கொரானா பெரும்தொற்று காலத்திலும் பீகார் தேர்தலை தேர்தல் ஆணையம் வெற்றிகரமாக நடத்தியுள்ளது அந்த தேர்தலில் வழக்கத்தை விட அதிக சதவிகிதம் ஓட்டுகள் பதிவாகின .

இம்முறை 80வயதுக்கு மேல் உள்ள வாக்காளர்களுக்கு தபால் வாக்கு செலுத்தும் முறை போன்று பல்வேறு புதிய முறைகள் ஏற்படுத்த உள்ளது வாக்கு சாவடிகளில் சிசிடிவி கேமரா பொருத்தபட்டு கண்காணிக்கப்படும் வேட்பாளருடன் 5 பேர் மட்டுமே வீடுகளுக்கு வாக்கு சேகரிக்க செல்ல வேண்டும் ஒரு வேட்பாளர் அதிகபட்சம் 30 லட்சம் மட்டுமே தேர்தல் செலவு செய்யபட வேண்டும் தேர்தல் செலவுகளை கண்காணிக்க தமிழகத்திற்கு 2 சிறப்பு அதிகாரிகள் நியமிக்கபட்டுள்ளார். தேர்தல் பணிகளில் ஈடுபடும் அனைத்து பணியாளர்களும் கட்டாயம் கொரானா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் .

தமிழக சட்டமன்ற தேர்தல் சிறப்பு அதிகாரியாக அலோக் வர்தன் நியமிக்கபட்டுள்ளார்.

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடத்தப்படும் வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடைபெறும் என தெரிவித்துள்ளார்

 

 

 

 

Leave a Reply

%d bloggers like this: