எடப்பாடியின்  வியூகங்களால் திமுக கலக்கம் : தோல்வி பயத்தில் திமுகவின் சீனியர்கள் !!!!

எடப்பாடியின்  வியூகங்களால் திமுக கலக்கம்  தோல்வி பயத்தில் திமுக சீனியர்கள்

Tamilnadu election

2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக பெற்ற இமாலய வெற்றியால் 2021ல் நமது ஆட்சி தான் என்று அதிக நம்பிக்கயுடன் இருந்த திமுகவினர்க்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய அதிரடி ஆட்டம் அதிக கலக்கத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது கிரிக்கெட்டில் பவர் பிளே ஓவரில் ரன்களை கட்டுபடுத்த முடியாமல் தினறும் பீல்டிங் டீம் போல எடப்பாடியின் வியூகங்களால் ஆட்டம் கண்டுள்ளது திமுகவின் கூடாரம்.

திமுகவினரின் இந்த கலக்கத்துக்கு காரணம் மேடைக்கு மேடை அதிமுக ஊழல் கட்சி என திமுக தலைவர் ஸ்டாலினும் கட்சியின் சீனியர்களும் கூறினாலும் ஊழலை பற்றி திமுகவினரின் பேச்சை மக்கள் அவ்வளவாக ரசிக்கவில்லை என்பதை மெல்ல மெல்ல உணர தொடங்கியுள்ளது .

கூட்டுறவு கடன் தள்ளுபடி விசயத்திலும் எடப்பாடி மக்களின் கவனத்தை ஈர்த்தது திமுகவினரின் தூக்கத்தை கொடுத்துள்ளது இதனால் உசாரான திமுகவின் தேர்தல் திட்டம் வகுப்பாளர்கள் குழு வேறு வழியை தேர்ந்தெடுத்தது அது பிஜேபி க்கு எதிராக பிரச்சாரம் செய்து மக்களை அதிமுக கூட்டணிக்கு எதிராக மக்களை திரும்புவது இதை அறிந்து கொண்ட முதல்வர் தரப்பு கூடிய விரைவில் காங்கிரஸ் க்கு தான் திமுக அடிமையாக இருந்து வந்துள்ளது திமுகவை மிரட்டி 2011 தேர்தலில் 63 தொகுதிகளை காங்கிரஸ் பெற்றது ஆனால் அதிமுகவோ 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வுக்கு அதன் வாக்கு வங்கிக்கு ஏற்ப 5 தொகுதியை மட்டுமே வழங்கியது அதிமுகவும் பாஜகவும் நண்பர்கள் காங்கிரஸ் க்கு தான் திமுக அடிமை என்கிற ரீதியாக அதிரடி பிரச்சாரம் மேற்கொள்ள முதல்வர் தரப்பு தயாராவதை அறிந்த திமுகவின் சீனியர்களுக்கு மறுபடியும் எதிர்கட்சி வரிசையில் அமரும் சூழல் ஏற்பட்டு விடுமோ என அச்சத்தில் உள்ளனர்.

Edappadi k palanisamy

திமுகவினருக்கு மேலும் கிலியை ஏற்படுத்தும் விதமாக முதல்வர் மேலும் இரண்டு அஸ்திரங்களை கையில் எடுக்க உள்ளார் அதில் முதலாவதாக மகளிர் சுய உதவி குழுவின் கூட்டுறவு கடன் தள்ளுபடி திட்டத்தை ஓரிரு நாளில் அறிவிக்க உள்ளதாக தெரிகிறது . அடுத்த அஸ்திரமாக பெட்ரோல் டீசல் மீதான மாநில அரசின் வாட் வரியை குறைப்பது தற்போதைய விலையில் இருந்து 10₹ அளவு பெட்ரோல் டீசல் விலையை குறைக்கும் அளவு திட்டம் வகுத்து வருகின்றனர் .

இந்த இரு திட்டங்களையும் நடைமுறை படுத்தினால் திமுக பாடு திண்டாட்டமாகிவிடும் என்பதே நிதர்சனம்.

Leave a Reply

%d bloggers like this: