[ Talapathy 65 ] பூஜையுடன் தொடங்கியது விஜயின் ” தளபதி 65 ”  திரைப்படம்

[ Talapathy 65 ]

இன்று பூஜையுடன் தொடங்கியது விஜயின் ” தளபதி 65 ”  திரைப்படம்


இளையதளபதி விஜயின் 65வது திரைப்படமான இந்த திரைப்படத்தை ரசிகர்கள் ” தளபதி 65 ” என அழைத்து வருகின்றனர். கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குகிறார் .

மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்க உள்ள இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மிஷ்கினின் முகமூடி திரைப்படத்தின் கதாநாயகி பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார் படத்தின் இசையை பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.

Talapathy-65

இதை தொடர்ந்து ” தளபதி 65 ” திரைப்படத்திற்கான பூஜை சன் டிவி ஸ்டூடியோவில் இன்று நடைபெற்றது. இதில் நடிகர் விஜய், இயக்குனர் நெல்சன் உள்பட படக்குழுவினர் பலர் கலந்துகொண்டனர். நடிகை பூஜா ஹெக்டே இன்று நடந்த படத்தின் பூஜையில் கலந்து கொள்ளவில்லை அவர் வேறொரு படப்பிடிப்பில் உள்ளதால் வர இயலவில்லை என ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்

தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு தமிழக சட்டசபை தேர்தல் முடிவடைந்தவுடன் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது மேலும் ரஷ்யாவில் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் அதற்கான லொகேஷன் அடையாளம் காணும் வேலையில் இயக்குனர் நெல்சன் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Star Tamil News                 Talapathy 65

Leave a Reply

%d bloggers like this: