[ Taiwan ] தைவான் ரயில் விபத்து – 36 பேர் உடல் நசுங்கி பலி!!

[ Taiwan ]

தைவான் ரயில் விபத்து – 36 பேர் உடல் நசுங்கி பலி


தைவானில் 350 பயணிகளுடன் தைதுங் என்னும் நகரை நோக்கி சென்றுகொண்டிருந்த பயணிகள் ரெயில் ஒன்று ஹுவாலியன் என்கிற பகுதிக்கு அருகே உள்ள சுரங்கப்பாதையில் சிக்கி விபத்துக்குள்ளானது.

8 பெட்டிகளுடன் இன்று காலை 9 மணி அளவில் தைதுங் நகரை நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் ஹுவாலியன் சுரங்கப் பாதையை நெருங்கும் வேலையில் தண்டவாளத்தின் அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரியின் ஹேண்ட் பிரேக் வேலை செய்யாததால் எதிர்பாராதவிதமாக தண்டவாளத்தின் அருகே உருண்டு சென்றது இதனால் கண்ணிமைக்கும் நேரத்தில் லாரி மீது மோதிய ரயில் கட்டுப்பாட்டை இழந்து சுரங்கத்தினுள் பக்கவாட்டுச் சுவரின் மீது இடித்து  தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

Taiwan

இந்த கோர விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்துக்குள்ளான ரயிலின் சிக்கிய பயணிகள் தானியங்கி கதவுகள் திறக்கப்படாததால் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து வெளியேறினர். இந்த விபத்தில் சுமார் 36 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானதாகவும் 81 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தைவான் நாட்டின் ரயில்வே துறை தெரிவித்துள்ளது.


Star Tamil News                                  Taiwan 

Leave a Reply

%d bloggers like this: