[ T Nagar ] ” ஏலத்தில் விடபடவுள்ளது தி.நகர் சரவணா ஸ்டோர்ஸ் கடை ” -01

T Nagar சரவணா ஸ்டோர்ஸ் கடை ஏலம் விடபடவுள்ளது

தி.நகர் சரவணா ஸ்டோர்ஸ் என்றால் தமிழகத்தில் தெரியாதவர்களே இருக்க முடியாது என்கிற அளவுக்கு பிரபலமான சில்லறை விற்பனை அங்காடி. தமிழகத்தின் அடையாளங்களில் சரவணா  ஸ்டோர்ஸும் ஒன்று என கூறினாலும் மிகையாகாது.

70’களில் ஒற்றைப் பாத்திர கடையாக தொடங்கப்பட்ட சரவணா ஸ்டோர்ஸ் அதன்பின்னர் சில்லரை விற்பனை துறையில் அசுர வளர்ச்சி பெற்று  தனது கிளைகளை மாநிலம் முழுவதும் பரப்பியது. பல ஆண்டுகளாக சில்லறை வர்த்தகத்தில்  முடிசூடா மன்னனாக திகழ்ந்து வந்த சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் ஏலத்தில் விடப் போவதாக வெளியான செய்தி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியன் வங்கி அறிவிப்பு

T-Nagar

இதுகுறித்து T Nagar இந்தியன் வங்கி கிளை வெளியிட்டுள்ள அறிவிப்பில் சரவணா ஸ்டோர்ஸ் இந்தியன் வங்கிக்கு  செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை திரும்ப  செலுத்தும்படி சரவணா யோகரத்தினம் அவர்களின் மகன் துரை மற்றும் அவரது மனைவி சுஜாதா மற்றும் அவரது மகன் ஆகியோருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதாகவும் கொடுக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் அவர்களால் பணத்தை திருப்பி செலுத்த முடியாத காரணத்தினால்.

தி நகர் உஸ்மான் சாலையில் உள்ள 4,800 சதுர அடி பரப்பளவு கொண்ட சரவணா கோல்டு பேலஸ் கடை 124 கோடி ரூபாய்க்கும் ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடை 46 கோடி ரூபாய்க்கும்  மார்ச் 17ஆம் தேதி ஏலம் விடப்படும் என பொது அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

Leave a Reply

%d bloggers like this: